Header Ads



அமெரிக்க அழகியாக தேர்வு பெற்றவரை அரேபியர் என வர்ணனை

அமெரிக்காவில் 2014–ம் ஆண்டிற்கான அழகிப் போட்டி நியூஜெர்சியில் உள்ள அட்லாண்டிக் நகரில் நடந்தது. அதில் மொத்தம் 53 அழகிகள் கலந்து கொண்டனர். அவர்களில் அமெரிக்க அழகியாக நினா தாவ்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

24 வயதான இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவை பூர்வீகமாக கொண்ட தெலுங்கு பெண். இவரது தந்தை அமெரிக்காவில் மகப்பேறு டாக்டராக பணி புரிகிறார். அமெரிக்கர் அல்லாத, பொன்னிற கூந்தல் இல்லாத, நீல நிறக்கண்கள் இல்லாத இந்திய வம்சாவளி பெண் நினாவை அழகு ராணியாக தேர்ந்தெடுத்ததை சிலர் விரும்பவில்லை.

அவர் குறித்து டுவிட்டர் இணைய தளத்தில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அவை இனவெறியை தூண்டுபவையாக உள்ளன. அவற்றில் சிலர் இவரை அரேபியர் என்றும் கூறியுள்ளனர். இவரை அமெரிக்கர் என எற்றுக்கொள்ள முடியாது என்றும், இவர் அழகியாக தேர்வு பெற்றதை நம்ப முடியவில்லை என்றும் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

அரேபியர் ஒருவர் மிஸ் அமெரிக்கா ஆகிவிட்டார் என்றும் கூறிய ஒரு நபர் இவரை அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புபடுத்தி தீவிரவாதி என்றும் வர்ணித்துள்ளார். அல்-கொய்தாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் தங்களது எரிச்சலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் இதை நினா தாவ்லூரி ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக தனது செயலை சேவையின் மூலம் வெளிப்படுத்த உள்ளதாக கூறினார்.

No comments

Powered by Blogger.