Header Ads



சவூதியில்தான் இப்படியும் நடக்கிறது...!

(காத்தான்குடி முபா)

உலகில் எல்லா இடங்களிலும் எல்லா நிலை மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அண்மைக்காலமாக வீட்டுப் பணிப்பெண்கள் சவூதி அரேபியாவில் படும் அவலம் பற்றி மிக மோசமாக சர்வதேச ஊடகங்கள் இரட்டிப்பு செய்த கருத்துக்களை வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்று.

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வீட்டுப் பணிப்பெண் ஒருவருக்கு நடந்த நேரடியாக நான் அவதானித்த நிகழ்வு ஒன்றை இணையதள வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

விடுமுறையில் இலங்கை செல்லும் பணிப்பெண் ஒருவரை சவூதி குடும்பம் ஒன்று வழியனுப்பி வைக்க விமான நிலையம் வந்திருந்தது, சிறுவர் முதியவர் பெண்கள் என அனைவரும் வந்திருந்தனர், பணிப்பெண் வெறும் கையுடன் நடந்து வருகிறார், அவரின் பொதிகளை அந்த குடும்பமே சுமந்து வருகிறது, தங்களின் ஒரு மகள் பிரிந்து செல்லும் போது ஏற்படும் கவலையின் அடையாளங்களை போலவே அனைவரது முகத்திலும் கவலையின் சுவடுகளை காண முடிந்தது. அப்பணிப்பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அந்தப் பெண் விடைபெறும் போது அவருக்கு எல்லோருமே அன்பளிப்புகள் வழங்கினார்கள்.

பெண்கள் அவரை முத்தமிட்டு வழியனுப்புகிறார்கள். குழந்தைகள் அப்பணிப்பெண்ணின் கைகளை பிடித்துக்கொண்டு அழுகிறார்கள். அப்பணிப்பெண் சுங்கப் பரிசோதனைகளை தாண்டி அவர்களை விட்டு மறையும்வரை அந்தக் குடும்பமே அத்திசையை உற்றுநோக்கிக் கொண்டு இருந்தார்கள். பார்க்கவே மிகவும் ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது.

சவூதி அரேபியாவில் இப்படியும் வீட்டு எஜமானர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை நினைக்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்...!

6 comments:

  1. நல்ல காட்சி அமைப்பு. இது விக்ரமன் படதில சேரன் நடிதால் எப்பிடி இருக்குமோ அப்பிடி தான் இருக்கிறது. அப்பிடி வழியனுப்ப பட்ட பெண் யார்? எந்த ஊர்? எந்த flight இல் பயணம் செய்தார்? இது எல்லாம் குறிப்பிடாமல் செய்தி போட்டால் அது கதை தானே....சவூதியை காப்பாற்ற உங்களுக்கு என்ன அவசரம்?

    ReplyDelete
  2. எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் ஒரு சிங்களப் பெண் 20 வருடங்களாக பணி புரிந்து விட்டு நாட்டுக்கு சென்று இப்போது வரமுடியாமல் இருக்கின்றாள் காரணம் அவளுக்கு தற்போது வயது 49 ஆனால் அவள் வருவதற்கு தயார் காரணம் இவர்களின் கணிவான உபசரிப்பு தற்போது என்னிடம் வீ்ட்டு எஜமான தான் ரியாத் கவர்னரிடம் இருந்து இலங்கையில் உள்ள சவ்தி தூதருக்கு ஒரு கடிதம் தருவதாகவும் அதை எடுத்துக் கொண்டு சென்றால் வீசா அடிப்பார்கள் என்றும் அந்த பெண்ணிடம் கூறுமாறு வேண்டினார் நானும் கதைத்தேன் அவள் வருவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார்
    இப்படியாக சிறந்தவர்கள் பலர் இருக்க இங்கு வந்து வேளையில் பெடு போக்கு அல்லது பணிப்பெண்களை வீட்டை விட்டு வெளியில் எடுத்து பல குற்றச் செயல்களில் ஈடுபடவைக்கும் அதிகமான சாரதிகள் மற்றும் சிலர்கள் தான் பொய்ச் செய்திகளை பரப்புகின்றார்கள்
    அநியாயம் நடக்கின்றது ஆனால் செல்லப்படும் அளவுக்கு நான் பார்க்கல்ல

    ReplyDelete
  3. Thank you for sharing your experience!

    I lived in Saudi Arabia for over 10 years and I have witnessed many instances like this at the Dhahran airport which I used frequently. I have even seen the Saudi bosses and their family bidding farewell to their maids with tears. My Saudi boss had an Indonesian maid who used to run around their house singing. She was treated like their youngest daughter by the family! There are cases of very bad treatments meted out to maids in Saudi, but in the mean time, there are very good families who treat their maids as family member. The problem is, only the bad ones are highlighted in the media!

    ReplyDelete
  4. இதை படித்தால் சிரிப்புதான் வருது....ஹி ஹி ஹி ஹி

    ReplyDelete
  5. Exactly!. I have heard such touching stories while I was in Saudi too. There are many good Saudis who are God feared and treat their servants well. As you said, good ones are not hiighlighted always.

    ReplyDelete
  6. எல்லா மனிதர்களும் ஒன்று போல இல்லை என்பது எங்கள் கை விரல்களில் இருந்து உதாரணம் காட்டப் பட்டுள்ளது.. ஐந்து விரல்களில் ஒன்று உயரமாக இருப்பது போல.. ஐம்பதில் ஒருவராவது நல்ல குணம் படைத்தவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். அது எங்கள் கண்மணி நாயகம் பிறந்த மண்ணல்லவா..?? இடப்பட்ட பதிவு சிங்கள ஊடகங்களில் பதிய மாட்டார்களே..அப்படி பதிந்தால்.. சவுதிக்கு இருக்கும் கெட்ட பெயர் மறைந்து போகுமென்றோ ..??

    ReplyDelete

Powered by Blogger.