Header Ads



ரசாயன ஆயுதங்களை அழிக்க பணமும், காலமும் தேவை - ஆசாத்

சிரியா நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுக்கு எதிராக போராடி வரும் புரட்சி படையினரை ஒடுக்குவதற்காக ராணுவம் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

சமீபத்தில் பொதுமக்கள் மீது ராணுவம் ரசாயன ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லபட்படனர். இந்த சம்பவத்தை அடுத்து சிரியாவுக்கு ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் நெருக்கடி கொடுத்தன.

சிரியாவை தாக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்தது. இதற்காக போர் கப்பல்களையும் சிரியா அருகே அமெரிக்கா நிறுத்தியது. சிரியா தனது ரசாயன ஆயுதங்களை அழித்துவிட்டால் தாக்குதல் நடத்தமாட்டோம் என்று அமெரிக்கா கூறியது. அதை சிரியா ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால்போர் பதட்டம் சற்று தணிந்துள்ளது.

இந்த நிலையில் சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் டி.வி. ஒன்றில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:–

எங்கள் ராணுவம் ரசாயன ஆயுத தாக்குதல் எதுவும் நடத்தவில்லை. எங்கள் மீது தவறான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

எங்களிடம் இருக்கும் ரசாயன ஆயுதங்களை அழிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் நாங்கள் இதை உடனடியாக செய்ய முடியாது. ரசாயன ஆயுதங்களை அழிக்க பல 100 கோடி ரூபாய் தேவைப்படும். மேலும் இதை செயல்படுத்த நிபுணர்களும் தேவைப்படுகிறார்கள். எனவே ஒவ்வொன்றாக தான் ஆயுதங்களை கடும் சிரமத்துக்கிடையே அழிக்க முடியும். இதற்கு ஒரு ஆண்டு காலம் தேவைப்படும்.

அமெரிக்கா எங்கள் நாட்டு உள் விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடுவதாக நான் கருதுகிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.