Header Ads



முஸ்லிம் அமைச்சர்கள் தமது மதத்தை விற்று பணம் சம்பாதிக்கும் நிலைமை - அசாத் சாலி

ஹிஸ்புல்லா, பௌசி, காதர் போன்ற அமைச்சர்கள் ராஜபக்ஷ குடும்பத்திடம் தமது மதத்தை விற்று பிழைப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய மாகாண சபை வேட்பாளர் அசாத் சாலி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் கிராமங்களுக்கு சென்று இனவாத்தை தூண்டி வாக்குகளை பெற இந்த முஸ்லிம் அமைச்சர்கள் முயற்சித்து வருகின்றனர்.

அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட குழுக்கள் முஸ்லிம் பள்ளிவாசல்கள், வணக்கஸ்தலங்கள், முஸ்லிம் வர்த்தக நிலையங்களை தாக்கியமை சம்பந்தமாக ஆதாரங்களுடன் ஒப்புவிக்கப்பட்டது.

ஆனால் இந்த அமைச்சர்கள் பொய் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். பௌசி, காதர் போன்ற அமைச்சர்கள் முஸ்லிம் பள்ளிகளுக்கு சென்று எவராவது பள்ளியை தாக்கினார்களா என்று தற்போது விசாரித்து வருகின்றனர். அப்படியான சம்பவங்களை தாம் அறியவில்லை என்கின்றனர்.

எனினும் தம்புள்ளை பள்ளிவாசலுக்கு இந்த அரசாங்கம் செய்த கொடுமையை இவர்கள் அறிந்துள்ளனர். இதற்கு முன்னர் அரசாங்கம் செய்தவைகளை சீடி ஆதாரங்களுடன் வழங்கியுள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இன்று இந்த முஸ்லிம் அமைச்சர்கள் தமது மதத்தை விற்றாவது பணத்தை சம்பாதிக்கும் நிலைமைக்கு சென்றுள்ளனர் என்றார்.

2 comments:

  1. மதிப்புக்குறிய ஆசாத் சாலி அவர்களே... திருந்தாத சமுதாயம்.... உங்களின் வீராப்பு பேச்சு மட்டும் அவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் என்று நினைக்கிறீர்களா ? கிடையவே கிடையாது....

    எமது மக்களின் பொன்னான வாக்குகளினால் தான் அந்த தலைவர்களும் பொருக்கிகளானார்கள்.... 'யாரை யாரென்று சொல்வது'

    ReplyDelete
  2. allah parttu kooliya kodukkattum

    ReplyDelete

Powered by Blogger.