Header Ads



ஈராக்கில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு

ஈராக்கில் தொழில், தொழிற்பயிற்சி வாய்ப்புகளை இலங்கையர்களுக்கு அதிகமாகப் பெற்றுக் கொடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நலன்புரி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கையின் சார்பில் அமைச்சர் டிலான் பெரேராவும், ஈராக்கின் சார்பில் அந்நாட்டு தொழில், சமூக நடவடிக்கை அமைச்சர் நஸார் அலி ரூபைய்யும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இலங்கையர்களுக்கு வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை அதிகமாகப் பெற்றுக் கொள்ளும் அமைச்சரின் கோட்பாட்டின் பேரில் இரு நாடுகளின் அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குறிப்பாக ஈராக்கில் நிர்மாண, விவசாயக் கைத்தொழில் துறைகளில் நாட்டம் செலுத்த கவனம் செலுத்தப்பட்டது. அமைச்சின் செயலர் கர்னல் நிஸ்ஸாட் என். விஜேரத்ன, இலங்கையிலுள்ள ஈராக் தூதுவர் கே.ரீ. கஹலிப், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத் தலைவர் அமல் சேனாலங்காதிகார ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. டிலான் பெரேரா எதற்கும் ஒரு முறை BBS சொன்னால் நல்லது, ஈராக் முஸ்லிம் நாடு பௌத்தர்களை அங்கு வேலைக்கு அனுப்பவேண்டாம், அன்னியர் அங்கு உழைக்கும் பணம் அவர்களுக்கு ஹராம் என்று

    ReplyDelete

Powered by Blogger.