Header Ads



இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே பாலம்..!

இந்தியா மற்றும் இலங்கைகு இடையே பாலம் ஒன்றை நிர்மாணிப்பதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே இரு தரப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் இந்திய ராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையே இந்த பாலத்தை நிர்மாணிப்பதன் மூலம் இந்த இலக்கை எட்ட முடியும் என இந்திய லோக் சபையின் எதிர் கட்சி உறுப்பினர் அநுராங் தாக்கூர் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலாத் துறையினை பாரிய அளவில் மேம்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு விழா தொடர்பாக ராமேஸ்வரத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில், அநுராங் தாக்கூருடன் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய சபையின் கே. முரளீதரனும் கலந்து கொண்டதாக பிரஸ் ரஸ்ட் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது. Sfm

No comments

Powered by Blogger.