Header Ads



கிட்னியைத் திருடியது யார்..?

கிட்னியைத் திருடியது யார் ? என்றொரு கேள்வியை கேட்டு வருகிறார் சவூதி குடிமகன் அலீ அல் முர்ஷித் அல் ஒதைபி.

அவருடைய அண்ணன் மகன் காஜி அல் முர்ஷித் அல் ஒதைபியின் சிறுநீரகத்தைத் தான் காணவில்லையாம். இது தொடர்பாக, அரசு பொது மருத்துவமனை ஒன்றை குற்றஞ்சாட்டுகிறார் அலீ.

அந்த மருத்துவமனையின் இயக்குநர் மரு. சாஹர் அல் ஒதைபி கூறுகையில், தான் புதிதாகப் பொறுப்பேற்றுள்ளதாகவும், கூறப்படும் குற்றச்சாட்டு பற்றி விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன், மின்சாரத் தாக்குதலுக்காளான காஜியை குறிப்பிட்டுள்ள பொது மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். அச்சமயம், காஜிக்கு உள்ளூர இரத்தக் கசிவு இருப்பதாகவும், பழுதடைந்த மண்ணீரல் அகற்றப்பட வேண்டியது அவசியம் என்றும் மருத்துவர்கள் காஜியின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். அவ்வாறே நடந்துள்ளது.

மீண்டும், கடந்த மாதம், விபத்தொன்றில் சிக்கிய காஜியை அதே மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை தவிர்க்க இயலாதது என்று கூறியுள்ளனர். அதன்படி, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சமயம், காஜியின் மண்ணீரலும், கூடவே இடது சிறுநீரகமும் அகற்றப்பட்டுள்ளதை மருத்துவர்கள் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மருத்துவர்கள் முன்பு கூறியதன் பிரகாரம், மண்ணீரல் மட்டுமே அகற்றப்பட்டிருக்கும் என்று நினைத்த அலீ அல் ஒதைபி, காஜியின் சிறுநீரகமும் அகற்றப்பட்டதில் பிழை இருக்க முடியாது என்றும் வேறு குற்ற நோக்கம் இருப்பதாகக் கூறி அந்த மருத்துவமனை மீது  அரசிடம் முறையிட்டுள்ளார். Inne

No comments

Powered by Blogger.