பொத்துவில் வைத்தியசாலை வீதியின் அவல நிலை
(சம்சுல் ஹுதா)
மனித அன்றாட நடவடிக்கைக்கு இன்று போக்குவரத்து அத்தியவசியமான ஒரு விடயமாகும். இது மறுக்க முடியாத உண்மையும் ஒன்றாகும். அந்த வகையில் பொத்துவில் ஆதார வைத்தியசாலை குறுக்கு வீதியின் நிலை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மோசமான நிலையில் எவரது கவனிப்பும் இன்றி காணப்படுகின்றது.
இந்த வீதியினூடாக பொத்துவில் பகுதியின் அரைவவாசிக்கும் மேற்பட்ட மக்கள் தனது அன்றாட தேவைகளை நிiவேற்றுவதற்காக இவ்வீதியினையே பயன்படுத்துகின்றனர்.
மேலும் இவ்வீதியில் ஒரு இரத்த பரிசோதனை நிலையம் மற்றும் ஒரு தனியார் பார்மஸியும் உள்ளன.
அது மட்டுமல்லாது பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் பணி புரியும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் தங்குமிட கட்டிடமும் இவ்வீதியிலேய காணப்படுகின்றது.
இவ் வீதியின் இடையிடையே பாரிய குன்றும் குழிகள் காணப்படுவதனால் இரவில் பயணிப்பது கூட ஒரு சிரமமாக உள்ளது. எனவே இதற்கு உடனடியாக உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கும் படி பொத்துவில் பிரதேசத்தது மக்கள் மற்றும் ஆட்டோ சாரதிகள் வினயமாக வேண்டுகின்றார்கள்.
Post a Comment