Header Ads



கிராமத்தைக் கட்டியெழுப்பும் பணி உள்ளுராட்சி சபைகளிடம் உள்ளது - அமைச்சர் அதாஉல்லா


(ஜே.எம்.வஸீர்)

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் 170 மில்லியன் ரூபா செலவில் நாட்டில் காணப்படும் 20ற்கும் மேற்பட்ட உள்ளுராட்சி சபைகளுக்கு கெப் மற்றும் டிப்பர் வாகனம் போன்றவற்றை உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களிடம் கையளித்தார். இந்நிகழ்வு இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இவ்வாறான வாகனங்கள் உள்ளுராட்சி சபைகளுக்கு கையளிக்கப்பட்டதன் மூலம் பல ஆண்டுகள் தாம் வாகனங்களின்மையால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்ததாகவும் அதற்கு தற்போது நிரந்தரத் தீர்வு கிடைத்துள்ளதாகவும் பெற்றுத்தந்த அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் உள்ளுராட்சி நிறுவனத் தலைவர்கள் தெரிவித்தனர். 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா,

இன்று நாம் 170மில்லியன் ரூபா பெறுமதியான கெப் மற்றும் டிப்பர் வாகனங்களை 20க்கும் மேற்பட்ட உள்ளுராட்சி சபைகளுக்கு வழங்கியுள்ளோம். வாகனங்களின்றி நீங்கள் எதிர்நோக்கிய சிரமங்களை கருத்திற்கொண்டே இவ்வாகனங்களை உங்களுக்கு வழங்கியிருக்கின்றோம். இதனைக் கொண்டு மக்களுக்கு நிறைய சேவை செய்ய வேண்டும். கிராமத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்பது நமது ஜனாதிபதி அவர்களின் கோட்பாடாகும். அதற்கமைய கிராமத்தைக் கட்டியெழுப்பும் பெரும்பணி உள்ளுராட்சி சபைகளிடம் உள்ளது. இதற்காக எனது அமைச்சு உள்ளுராட்சி சபைகளை மேம்படுத்த, பல்வேறு வசதிகளை  செய்து வருகின்ற்து. புரநெகும திட்டத்தின் கீழ் நாட்டில் குறைந்த வருமானம் பெறும் 108 உள்ளுராட்சி சபைகளை இணங்கண்டு அதற்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தத் தேவையான நிதி உதவிகளையும் தற்போது வழங்கி வருகின்றோம். எனவே நமது ஜனாதிபதி அவர்களும் கிராமத்தைக் கட்டியெழுப்ப மிகவும் முனைப்புடன் செயற்படுகின்றார். எனவே உள்ளுராட்சி சபைகளின் அர்ப்பணிப்பு மிகவும் முக்கியமானதாகும். அதற்காக சகல உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் உள்ளுராட்சி சபைகளை பலப்படுத்த முன்வருமாறு தனதுரையில் வேண்டிக் கொண்டார். 

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர், ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க, இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவனத்தின் பணிப்பாளரும் அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பொறியியலாளர் எம்.எஸ். நஸீர், புரநெகும திட்டப் பணிப்பாளர் கமகே உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகளும் உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

1 comment:

  1. Mr. Minister!Good job but did you see the extreamly poor condition of Akkaraipattu Roads???? during drainy seassion you need a boat to travell on the road, even a go cart cannot move on the same roads. it is good fun for you give a pose and speak for meadia but do the urgent need of your own home town were roads are like river during drainy session. Other inconveniance people are undergoing cannot write publically, Now over to you.

    ReplyDelete

Powered by Blogger.