மன்னார் மாவட்டத்திலுள்ள சிவில் சமூகப் பிரதிநிகளுடனான கலந்துரையாடல்
மன்னார் மாவட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகளை TNAயின் PMGG தலைமையிலான முஸ்லிம் கூட்டமைப்பு வேட்பாளர் அய்யூப் அஸ்மின் சந்தித்தார். மன்னார் மாவட்டத்திலுள்ள சிவில் சமூகப் பிரதிநிகளுடனான கலந்துரையாடல் ஒன்று ன்னாரில் இடம்பெற்றது.
இதன்போது வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான முஸ்லிம் கூட்டமைப்பின் வேட்பாளர் அய்யூப் அஸ்மின் மற்றும் அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலின்போது சிவில் சமூகப் பிரதிநிதிகளினால் பல ஆக்கபூர்வமான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டது அத்துடன் யுத்தத்துக்குப் பின்னரான வட மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் உறவை மீளக் கட்டி எழுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு இம்முன்னேடுப்பைச் செய்துள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான முஸ்லிம் அரசியல் கூட்டமைப்பினை தாம் பெரிதும் வரவேற்பதாகவும், இதற்கு தம்மால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
Post a Comment