காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர் அனுமதி
இலங்கையில் தென் மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2014 ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்கான மேற்படிக் கல்லூரியின் சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவு, அல்குர்ஆன் மனனப் பிரிவு என்பவற்றின் முதலாம் ஆண்டிற்கு புதிதாக மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதாக இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன் (பஹ்ஜி) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவுக்கு 15 வயதிற்கிடைப்பட்ட தற்பொழுது பாடசாலையில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் அல்குர்ஆனைச் சரளமாக ஓதத் தெரிந்தவர்களும், அல்குர்ஆன் மனனப் பிரிவுக்கு 11-13 வயதிற்கிடைப்பட்ட அல்குர்ஆனைச் சரளமாக ஓதத் தெரிந்தவர்கள் 31-10-2013 திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் போது கட்டாயமாக விண்ணப்பதாரிகளின் முழுப் பெயர், வயது, கல்வித் தரம், சேரவிரும்பும் பகுதி விலாசம், தொடர்பு கொள்ள வசதியான தொலைபேசி இலக்கம் என்பன பற்றிய முழு விபரங்கள் அடங்கிய சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை
அதிபர்,இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி, த. பெ. இல: 105,
இல.50, ஹிரிம்புர குறுக்கு வீதி, காலி என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க முடியும்.
அல்லது தொ.பே.இல. : 0912243672 , 077 7921418
தொ.நகல் : 0912222037 ஈமெயில்: ibnuabbas.galle@gmail.com
முகவரிக்கு தொடர்பு கொள்ள முடியும் எனவும் இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன் (பஹ்ஜி) தெரிவித்தார்.
இங்கு மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்பக் கல்வி வழங்கப்படுவதுடன் மாணவர்கள் க. பொ. த. சா/த, உ/த. பரீட்சைகளுக்கும் தயார்படுத்தப்படுகின்றனர். மேலும், புதிய கல்வியாண்டு தொடக்கம் சேர்வுக்கட்டணமாக 7500ரூபாயும் மாதாந்த விடுதிக்கட்டணமாக 3500 ரூபாயும் அறவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Allah may accept all your greate services, and grand you more strength to take more steps. With best regards of Hajji mohamed from oman
ReplyDelete