பாகிஸ்தான் பொலிஸ் இலங்கை வருகிறது
இலங்கையில் கடந்த வாரம் கைப்பற்றப்பட்ட பெருமளவு போதைப்பொருள், தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பாகிஸ்தானில் இருந்து காவல்துறை குழு ஒன்று இலங்கைக்கு வரவுள்ளது.
இந்த போதைப்பொருள் கைப்பற்றல் தொடர்பில் ஏற்கனவே, பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்
இந்தநிலையில், சர்வதேச காவல்துறையின் ஆலோசனையின் பேரில் இலங்கை வரும் பாகிஸ்தானிய காவல்துறைக்குழு, குறித்த போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஏனையவர்களை கண்டறியும் நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஊறுகொடவத்தை களஞ்சியத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்ட 261 கிலோ கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளின் சந்தைப்பெறுமதி 261 கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment