Header Ads



ஆசாத் சாலி, மனோ கனேசன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை

(JM.HFEEZ)

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்ட சிறுபான்மை வாக்களர்கள் தங்களது வாக்குகளை வெற்றிலைச் சின்னத்திற்கு எதிராகப் பயன்படுத்த வேண்டுமென  ஜனநயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கனேசன் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணியின் தரைவர் ஆசாத் சாலி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இன்று(18.9.2013) கண்டியில் வைத்து இக் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஆதில் மேலும் தெரிவித்ததுள்ளதாவது,

இந்த அரசு ஒரு இனவாத மதவாத அரசாகும். எனவே எமது ஜனநாயக ரீதியான எதிர்ப்பை தேர்தல் மூலம் மட்டுமே வெளிப்படுத்த முடியும். எனவே சிறுபான்மை மக்கள் தமது வாக்குகளை அரசிற்கு எதிராகப் பயன்படுத்துவது மட்டுமல்லாது சிறுபான்மை பிரதிநிதிகளையும் தெரிவுசெய்ய, தமது விருப்பு வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் மூன்று அங்கத்தினர்களுக்கு வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

கண்டி மாவட்டத்தில் யானைச் சின்னத்த்ல் போட்டியிடும் இரு தமிழர்களை மூன்றாவதாக ஆஸாத் சாலிக்கும் தமது வாக்குகளை வழங்கு வதுடன் நுவரெலியர் மாவட்ட முஸ்லிம் வாக்களர்கள் ராஜ்குமார் மற்றும் சந்திரகுமார் ஆகியேருக்கு தமது விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்றும் வேண்டியுள்ளனர்.

யுத்தம் முடிவுற்ற போதும் இன மத வாதங்களால் சிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்கும் இதவாத அரசிற்கு ஜனநாயக ரீதியில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர்களது நீண்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.