Header Ads



சவூதி அரேபியாவில் இருவருக்கு மரண தண்டனை

சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் மண்ணின் இரு மைந்தர்களுக்கு அவர்கள் செய்த கொலைக் குற்றத்திற்குத் தண்டனையாக மரண தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டது.

இத்தகவலை சவூதி உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

ஹசன் அல்நுதய்ஃபாத் என்னும் பெயருடைய  சவூதியர்  முஹம்மது அல் தோஸரி என்னும் சக சவூதியரைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காகவும், மற்றொரு கொலைக் குற்றவாளியான முஹம்மது அல் கஹ்தானி கத்தியால் குத்தி ஒருவரைக் கொன்றதற்காகவும், இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இத்துடன் இவ்வாண்டு  சவூதியில் மரண தண்டனை அடைந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆனது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொலை, வன்புணர்வு, மதநிந்தனை, ஆயுதந்தரித்த கொள்ளை, போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு சவூதி அரேபியச் சட்டப்படி மரண தண்டனை தரப்படுகிறது. inne

No comments

Powered by Blogger.