Header Ads



மக்களது உணர்வுகளை அழிவுக்காக துாண்டும் சக்திகளிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள்

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

விதவைகளையும், அங்கவீனர்களையும் உருவாக்கி அவர்களை அவலத்தில் ஆழ்த்திய தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் தமிழ் மக்கள் முன் வந்து இந்த அநியாயத்தை மீண்டும் புரிவதற்கு அனுமதி கோருகின்றனர் என்று தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன், இவ்வாறு மக்களது உணர்வுகளை அழிவுக்காக  துாண்டும் சக்திகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அம்பாள் புரம் கிராமத்தில் இன்று 14-09-2013 பிற்பகல் இடம் றெ்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் பேசுகையில் கூறியதாவது,

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் ஏன் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்.இந்த மாவட்டத்தின் அபிவிருத்தி குழுவின் தலைவர் என்ற வகையிலும்,பிரதேச அபிவிருத்திக்கும் பொருப்பானவர் என்பதினாலும்,அனைத்து செயற்பாடுகளுக்கான அனுமதியினை நான் வழங்க வேண்டும்.என்னைப் பொருத்த வரையில் நான் தழிழை நேசிப்பவன், பேசுவதும் தமிழ் மொழி,தமிழர்களது தேவைகள்,அபிலாஷைகளை நன்கு அறிந்தவன்.எமது மக்களது எதிர்காலத்தை இல்லாமல் செய்யும் சக்திகளை வண்மையாக கண்டிப்பவன்,எனவே உங்களது பிரதேசத்தின் அபிவிருத்திகளுக்கு எதையெல்லாம் செய்ய முடியுமோ அதனை எனது காலத்தில் செய்து தருவதற்கு செயற்பட்டுவருகின்றேன்.

மின்சாரம் இல்லாத எத்தனையோ கிராமங்களுக்கு அதனை பெற்றுத்தந்துள்ளோம்.இன்னும் அதனை தருவதற்கு மின்சார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை வழங்கி அந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.பாதைகள் இன்று நவீன மயப்படுத்தப்பட்டுவருகின்றது.முல்லைத்தீவின் உட்கட்டமைப்புக்கான பாதைகள்,துார சேவைகளுக்கான பாதைகள் எல்லாம் சிறந்த பாதைகளாக மாற்றப்பட்டுள்ளது.இந்த அபிவிருத்திகள் மூலம் கிராமங்களும்,மக்களும் நன்மையடைகின்றனர்.இந்த நன்மைகளை அப்பாவி எமது மக்கள் அனுபவிக்க கூடாது என்பதில் தமிழ் தேசிய கூட்டடமைப்பு உறுதியாக இருக்கின்றது.எது உரிமை என்று தெரியாமல் பசித்தவனுக்கு கொடுக்கப்பட வேண்டியது உணவு ஆனால் அவனுக்கு அதை கொடுக்காமல் வெறும் உரிடை என்கி்ன்ற வெறும் உணர்ச்சியினை கொடுத்தால் உரிமையினை பெற்றுக்  கொள்வதற்கு பதிலாக உயிரை மாய்த்தக் கொள்ள நேரிடும்.இதனை செய்ய வேண்டாம் என்று நாம் கேட்கின்றோம்.

மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு வந்தவர்கள்,இம்மக்களுக்கு துன்பங்களும்,துயரங்களும் தேவைகளும் வருகின்ற போது,இங்கு வந்து அவற்றை பெற்றுக் கொடுக்காமல் வெறும் வெற்றறிக்கைகளைவிடுத்து இன்னும் இந்த மக்களை அழிவுக்கு இட்டுச் செல்வதாக குற்றம் சாட்டியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்,இந்த தேர்தலில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் அரசாங்கம் அவர்களுக்கு செய்துள்ள அளப்பரிய நன்கொடைகளுக்கு நன்றியினை தெரிவிக்க தயாராகிவருகின்றனர் என்றும் கூறினார்.

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,முல்லை மாவட்டத்தில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  வேட்பாளர்களான சதாசிவம் கணகரத்தினம்,எம்.ஜனுாபர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

1 comment:

  1. அறிவிலித்தனமாக மக்கள் மத்தியில் பேசுவதை விட அறிவைத்தூய்டும் விதமாகப் பேசுவது மேல்.

    வன்னி மக்கள்தான் தமது வாக்குகளை அளித்து உங்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர். அந்த மக்களுக்கு சேவை செய்ய வேண்டியது உங்களின் கடமை. அதைச் செய்திருந்தால் நீங்கள் இப்படியெல்லாம் பிச்சை கேட்காமலேயே அந்த மக்கள் இன்னமும் உங்களுக்கு வாக்களிப்பார்கள். நீங்கள் மக்களுக்கு சரியாகச் சேவை செய்யாமல் அரசியல் வியாபாரத்திலும், கொங்றீட் உழைப்பிலும் ஈடுபட்டிருந்தால் அவர்கள் இம்முறை உங்களுக்கு மாறு செய்வார்கள்.

    த.தே.கூட்டமைப்பு அன்றிலிருந்து இன்று வரை தமிழ் உரிமைக்காகவும், தமிழ்த் தேசியத்திற்காகவும், தமிழ்பேசும் மக்களின் உரிமைக்காகவும் எந்தவிதமான சலுகைகளுக்கும் நாக்கை நீட்டாமல் குரல் கொடுக்கும் கட்சி. அது இந்த முறையும் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றது. அதனை 'ஊணர்ச்சியூட்டும் கருத்துக்கள்' என்று கொச்சைப்படுத்துவது அறிவுடமையல்ல.

    நீங்கள் என்னதான் புரியாணியைக் கொடுத்து விட்டு ஆட்சியாளர்களுக்கு குந்திக்கிடந்து சேவகம் செய்ய வேண்டும் என்று சொன்னாலும் மானமும் ரோஷமும் உள்ளவன் அந்தக் கோரிக்கைக்கு ஒரு போதும் உடன் பட மாட்டான். அது எத்தனை பேர் என்பது வரும் 21ம் திகதி உங்களுக்கும், உலகத்திற்கும் புரிந்து விடும்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.