Header Ads



சி.வி.விக்னேஸ்வரன் யார் முன் பதவியேற்பார்..?

யாழ்ப்பாணத்தில் வைத்து, வடக்கு மாகாணசபை முதல்வர் மற்றும் சபை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திடீர் அழைப்பு விடுத்துள்ளது.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அமெரிக்காவில் இருந்து திரும்பும் மகிந்த ராஜபக்சக்காக காத்திருக்கிறோம். என்று தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதல்வருக்கு யாழ்ப்பாணத்தில் வைத்தே மகிந்த ராஜபக்ச பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மாகாணசபைக்கள் சட்டத்தின்படி, மாகாண முதலமைச்சர், மகிந்த ராஜபக்ச முன்னிலையிலோ ஆளுனர் முன்னிலையிலோ பதவியேற்க முடியும்.  ஆனால் மாகாண அமைச்சர்கள், முதலமைச்சரின் முன்பாக பதவியேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.