ஹாஜிகளை ஏற்றிய முதலாவது விமானம் மக்கா நோக்கி பயணம் (பிரத்தியேக படங்கள்)
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
இவ்வருட புனித ஹஜ் கடமைக்கான ஹாஜிகளை ஏற்றிய முதலாவது பயணிகள் விமானம் இன்று (13) வெள்ளிக்கிழமை இலங்கையில் இருந்து புனித மக்கா நோக்கி பயணமானது.
இவ்ருடம் இலங்கையில் இருந்து 2240 ஹாஜிகள் ஹஜ் கடமையை நிறைவேற்ற சவுதி அரசாங்கத்தால் அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் பிரகாரம் முதல் தொகுதியில் சுமார் 75 ஹாஜிகளை ஏற்றிய சிறிலங்கன் விமானம் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவுதி அரேபியா நோக்கிச் சென்றது. மேற்படி வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல், பிரதிப்பணிப்பாளர் றபீக் இஸ்மாயில், எதவிப்பணிப்பாளர் நூறுல் அமீன், ஹஜ் குழு உறுப்பினர் இக்பால், சவுதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவராலயத்தின் விசா அலுவலர் மிசாறி அல்-தியாபி, விசா அலுவலரின் பிரத்தியோக செயலாளர் ஐ.ஐ.எம்.மாஹிர் உட்பட திணைக்கள அதிகாரிகளும் ஹஜ் முகவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment