Header Ads



தலிபான்களால் சிறை பிடிக்கப்பட்ட பெண் எம்.பி. விடுதலை

ஆப்கானிஸ்தானின் பெண் சட்ட மன்ற உறுப்பினர்களுள் ஒருவர் பரிபா அஹ்மதி ககர் என்பவர் ஆவார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பிரச்சினைகள் நிறைந்த இடமான கஸ்னி அருகே காரில் சென்றுகொண்டிருந்தபோது தலிபான்களால் சிறை பிடிக்கப்பட்டார்.

ஒரே வாரத்தில் அந்தப் பகுதியில் சிறைப் பிடிக்கப்பட்ட இரண்டாவது பெண் அரசியல்வாதி பரிபா ஆவார். மேலும், அரசுப் பணியில் இருக்கும் பெண் உறுப்பினர்கள் இதுபோல் தொடர்ந்து பிரச்சினைக்கு உள்ளாக்கப்படுவது பெரும் சர்ச்சையையும் எழுப்பியது. மூன்று வாரங்கள் கழித்து, கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் பரிபா விடுவிக்கப்பட்டார் என்று தலிபான் அமைப்பும், அரசு அதிகாரிகளும் நேற்று தெரிவித்துள்ளனர்.

1996-2001ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி புரிந்தபோது தங்கள் இயக்கத்தினை இஸ்லாமிய எமிரேட் என்று குறிப்பிட்டுக் கொள்வார்கள். அதே பெயரினைக் குறிப்பிட்ட தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளரான சபிஹுல்லா முஜாஹித், அரசு விடுவித்த தலிபான் அதிகாரியின் உறவினர்களான நான்கு பெண்கள், இரண்டு குழந்தைகளுக்குப் பதிலாக பரிபா விடுவிக்கப்பட்டார் என்று தெரிவித்தார். பரிபாவின் உறவினரும் இதை உறுதி செய்தார்.

No comments

Powered by Blogger.