Header Ads



நியூசிலாந்தில் இலங்கையர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை


கொடூர கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய இரண்டு இலங்கையர்களுக்கு நியூசிலாந்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. சக நாட்டவரை மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்ததாக குறித்த இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

24 வயதான துவான் பிரவேஸ் சவால் மற்றும் 35 வயதான விராஜ் வசந்த அழகக்கோன் ஆகியோருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் 21 நாட்கள் நடைபெற்றன.

நியூசிலாந்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 17 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும். திட்டமிட்ட முறையில் காதல் பிரச்சினை காரணமாக சக நண்பரை இவர்கள் இவரும் படுகொலை செய்ததாக நீதிமன்ற விசாரணைகளின் மூலம் உறுதியாகியுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் சமீர பத்தலகே என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு சடலம் மற்றும் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு தீ மூட்டப்பட்டதாக தெரியவந்துள்ளது. adt

No comments

Powered by Blogger.