Header Ads



அவுஸ்திரேலிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடல்

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக நியமனம்பெறவுள்ள டொனி எபட், ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதன் போது ஆட்கடத்தல் விவகாரங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் பேசப்பட்டதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக தெரிவித்துள்ளார்.

அவர் தமது வெளிநாட்டு கொள்கையை உருவாக்குவதன் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தையை மேற்கொண்டிருப்பதாக த ஒஸ்ட்ரேலியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் இருந்தே அதிக அளவான அகதிகள் அவுஸ்திரேலியா நோக்கி பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சட்டவிரோதமான அகதிப் பரம்பலை கட்டுப்படுத்துவது தொடர்பான தமது புதிய கொள்கை தொடர்பிலும், அதற்கான இலங்கையின் ஒத்துழைப்பு தொடர்பிலும் அவர் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதற்கிடையில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் தாம் கலந்துக் கொள்வதாகவும், டொனி எபட் உறுதியளித்துள்ளார். sfm

No comments

Powered by Blogger.