Header Ads



மன்னார் மாவட்ட விளையாட்டுக் கழகங்களின் ஒன்றுகூடல்

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து நாட்டின் பல பாகங்களில் வசித்தவரும் எஸ்.என். விளையாட்டுக்கழகம், என்.எஸ்.விளையாட்டுக்கழகம் மற்றும் அக்ரா விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் உறுப்பினர்களுக்கான 2013க்கான ஒன்று கூடல் ஒன்றினை எதிர்வரும் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ஏ.சி.எம்.உவைஸ் தெரிவித்தார்.

புத்தளம் குருநாகல் வீதியில் உள்ள நீச்சல் தடாக வளாகத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வில் இடம்பெயர்விற்குப் பின்னர் மேற்படிக் கழகங்களின் தற்போதைய நிலைமைகள், அவற்றின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் மற்றும் அவற்றின்  புனர் நிருமானம் செய்வது தொடர்பான பல விடயங்கள் நிகழ்வில் கலந்துரையாடப் படவுள்ளதால் மேற்படி மூன்று கழங்களின் உறுப்பினர்களையும் குறித்த தினத்தில் தவறாது  கலந்து கொள்ளுமாறும் தலைவர் உவைஸ் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.