மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர்களுக்கான நியமனம்
மன்னார் மாவட்டத்தில் காணப்படும் பல முஸ்லிம் கிராமங்களுக்கான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் காங்கிரசுக்கான பிரதேச அமைப்பாளர்கள் நியமனமும் கலந்துரையாடலும் மன்னாரில் இடம்பெற்றது.
இந்நிகழ்வினை இளைஞர் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுத் தலைவருமான ஏ.எம். ஜெமீல் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வு கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பரக்கதுள்ளா தலைமையில் 07-09-2013 இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாருக், காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கட்சியின் மாளிகைக்காட்டு அமைப்பாளருமான எம்.எச்.எம். இஸ்மாயில் மற்றும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களும் பெருந்திரளான இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment