Header Ads



மனோ கணேசனிடம் மன்னிப்பு கேட்கிறேன்..!

பிரபல   சிங்கள நிகழ்ச்சி  ஒன்றில்  நமது  சமூகத்துக்கு பாரிய  அளவில் அபகீர்த்தி    உண்டாகும்  வகையில்,  பொறுப்பான  பதவியில்  இருக்கும் அஸ்வர்  எம்.பி. , எந்த  வேளையிலும்  நமக்காய்  குரல் கொடுக்கும் மதிப்புகுரிய  மனோ கணேசன்  அவர்களை  தகாத வார்த்தைகளை பாவித்து, அவரது  மனதை  புண்படுத்திய   செய்தி கேட்டு   அதிர்ந்தது   போனது நம் மனது.

அஸ்வர்  எம்.பி.  முஸ்லிம்களின்  பிரச்சினைகள்  பற்றி    சம்பந்தன் ஐயா பேசும்  போதுகூட  சங்கடம் விளைவித்தமை குறிப்பிடத்தக்கது. 

கணம் மதிப்புகுரிய  மனோ கணேசன்  அவர்களே!!!!

எங்கள்  புனித இஸ்லாம்  மார்க்கம்  சகோதரத்துவத்தை  முன்னுரிமை படுத்துவதோடு, அழகிய முறையில் பேசவும் வலியுறுத்துகிறது. அஸ்வரின் இவ்வாறான  நடத்தை  நம் மார்க்கம் பற்றி தப்பான எண்ணங்களை  ஏனைய சகோதர்களுக்கு  ஏற்படுத்தும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.

நீங்கள் முஸ்லிம்கள் மீது வைத்துள்ள நல்ல எண்ணம் மற்றும் அன்பு குறித்து நாங்கள் அறிவோம்.

அஸ்வர்  எம்.பி. கூறிய கருத்துக்கு இஸ்லாமிய இலங்கை குடிமகன்  என்ற வகையிலும், பல்கலைகழக  மாணவன்  என்ற  வகையிலும்,  உங்களிடம் மனம் உணர்ந்து மன்னிப்பு கேட்கிறேன். மேலும் அஸ்வர் அவர்களுக்கு   இறைவன்  நேர்வழி காட்ட வேண்டும் என்று பிராத்தனை  செய்கிறேன்..!

இப்படிக்கு-

M.Z.M ZAFNAS 

(FACULTY OF ENGINEERING- UNIVERSITY OF PERADENIYA)



10 comments:

  1. Zafnas னுடன் நானும் இணைந்து கொண்டு மதிப்புக்குரிய திரு. மனோகணேசனிடம் எனது மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனைய முஸ்லிம் சகோதர சகோதரிகளும் இந்த பின்னூட்டலில் தங்களது பெயரை பதிவு செய்வதன் மூலம் நமது சமூகத்தின் நட்பன்பை வெளிப்படுத்தலாம்.

    அஸ்வர் எம்பிக்கு எல்லாம் வல்ல இறைவன் நற்பண்புகளையும் நேர் வழியையும் காட்டுவானாக...அமீன்.

    Zafnas க்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  2. iam aggre with you. Mr. Mano kaneasan we r realy sorry.

    ReplyDelete
  3. அமைச்சர் அஸ்வர் அவர்களே..... மனோ கணேசனிடம் நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும்.. அதுதான் எமது சமூகத்துக்கு நீங்கள் கொடுக்கும் கௌரவமாகும்.

    ReplyDelete
  4. சுன்னத்து பன்ன வேண்டியது இஸ்லாதின் கட்டாய கடமை இல்லை? சுன்னத்துபன்னாமல் வாழ்ந்தால் பாவமும் இல்லை ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் குடு கஞ்சா போதைவஸ்து பாதால உலக கோஸ்டி என கடத்தலிலும் கொள்ளையிலும் ஈடுபடுவதைபார்து வெட்கப்பட்டு இந்த மக்களிடம் மன்னிப்பு கேட்காத நாம் அஸ்வருடைய பேச்சுக்குமட்டும் முக்கியதுவம் கொடுப்பது அரசியல் காழ்புணர்ச்சி மிக்கது பேச்சு சுதந்திரம் உள்ள இந்த நாட்டில் குவைத் மன்னர் தன்னை இகழ்ந்தவர்களுக்கு தண்டனை கொடுத்தது போன்று முஸ்லிம் சமூகமும் யாரையும் அடக்கி ஆள்வதட்கு முனையகூடாது

    அஸ்வர் ஒரு நியமன எம்பி அவர் அவரை எதட்காக நியமித்தார்களோ அந்த கடமையை சரியாக செய்கிறார் அதல்லாமல் முஸ்லிம் சமூகம் வாக்களித்து தெறிவு செய்யாது ஒருவர் முஸ்லிம் என்ற அடையாளத்தை தன்னில் கொண்டிருப்பதட்காக மட்டுமே முஸ்லிம்களின் குரலாக ஒலிக்கவேண்டும் என்று எதிர்பார்பது மடத்தனமானது?
    ஒருத்தரை சுன்னத்து பன்ன சொன்னது எந்தவகையிலும் இழிவாக பார்க்க கூடியது அல்ல அஸ்வர் மனோகனேசனை சுகாதாரமாக இருக்க அழைத்திருக்கிறார் என்றுகூட வியாக்கியானப்படுத்தப்பட தக்கதே இந்த அழைப்பு?

    ReplyDelete
  5. மதிப்புக்குரிய மனோ கணேசன் அவர்களே, அறிவாளிகளுடன் மட்டும் உங்கள் விவாதங்களை வைத்துகொள்ளுங்கள் இது எல்லோருக்கும் சிறந்தது.

    ReplyDelete
  6. Well done ZAFNAS, even I felt very sorry for that debate, Aswar MP should learn how to talk, and also I appreciate Mr. Mano Ganeshan for his comments.

    ReplyDelete
  7. unmay nanbare name samugam ninippathy nengal solly erkkendeergal

    ReplyDelete
  8. Dear Mano Sir. i am accepting Zafnass Brother Statement also i am joining with him.

    ReplyDelete
  9. நண்பன் mzm. zafnas உடன் சேர்த்து மனோ கணேசன் ஐயா அவர்களிடம் இலங்கை முஸ்லிம் என்ற வகையில் நானும் அஸ்வர் mp யின் இந்த அநாகரிகமான கருத்துக்கு நானும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்... மனோ கணேசன் அய்யா ஒரு திறமை சாலி மட்டுமல்லாமல்... எதையும் புரிந்து கொண்டு நடக்கக் கூடியவர் என்ற வகையில் அவருடைய அமைதியான பதிலை முன்வைத்து இருக்கிறார். இந்த விடயத்தில் மனோ கணேசன் அய்யா பாராட்டப்பட வேண்டியவர்...

    ReplyDelete

Powered by Blogger.