Header Ads



தூக்குத் தண்டனை அமுலில் இல்லாததினால் குற்றச் செயல்கள் அதிகரிப்பு - அமைச்சர் எஸ்.பி

இலங்கையில் உடனடியாக தூக்கு தண்டனையை அமுல்படுத்துமாறு தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போதைப் பொருள் விற்பனையாளர்கள், கொலையாளிகள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக  தூக்குத் தண்டனை அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.

தூக்குத் தண்டனை அமுலில் இல்லாத காரணத்தினால்  நாட்டில் பயங்கரமான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.