மடவளை மதீனா மத்திய கல்லூரியிலும், ஜாமியுல் கைராத் ஜூம்மா பள்ளிவாசலிலும் திருட்டு
(JM.Hafeez)
வத்துகாமம் பொலீஸ் பிரிவைச் சேர்ந்த மடவளை நகரிலுள்ள இரண்டு பொது நிறுவனங்கள் ஒரே இரவில் உடைக்கப்பட்டு ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன.
மடவளை மதீனா மத்திய கல்லூரி மற்றும் அதற்கு நேர் எதிரிலுள்ள ஜாமியுல் கைராத் ஜூம்மா பள்ளி(பெரிய பள்ளி) என்பவற்றின் காரியாலய அறைகளே உடைக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க் கிழமை நள்ளிரவு இவை உடைக்கப்படடிருக்கலாம். நேற்று (10.9.2013) அதிகாலை இவற்றை அவதானித்ததனை அடுத்து செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து வத்துகாமம் பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதே நேரம் பாடசாலையில் காவலாளி கடமையில் இருந்த போதும் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. குhவலாளி முன் புறம் இருந்ததாகவும் பின் புறமாக வந்து உள்ளே உடைத்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப் படுகிறது.
மதீனா மத்திய கல்லூரி காரியலாயத்தில் இருந்த ஆவணங்கள் வைக்கும் அலுமாசியில் இருந்த ஒலிபெருக்கி விரிவாக்கள் கருவிகள் உற்பட மற்றும் பெறுமதியான பொருட்கள் சேதமின்றி காணப்பட்டதாகவும் ஆவணங்கள் சில குறைவதாகவும் தெரிய வருகிறது. இழப்புக்கள் பற்றி இன்னும் உத்தியோக பூர்வமாக அறியக்கிடைக்கவில்லை. மோப்ப நாய்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பொலீஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதேபோல் ஜாமியுள் கைராத் பள்ளியிலும் காரியாலண அறை பின் பக்க யன்னல் ஒன்று உடைக்கப்படடுள்ளது. ஆங்கும் சில தஸ்தாஜூவேக்கள் காணாமற் போயுள்ளதுடன வெள்ளிக் கிழமை கிடைக்கப் பெற்ற கணக்கிடப்படாத பள்ளி அன்பளிப்புக்கள் திருடப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அங்கும் இழப்புக்கள் பற்றி இன்னும் தெரிவிக்கப்படவில்லை. பொலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment