Header Ads



நாளை ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பம் – இலங்கை தொடர்பில் அறிக்கை

ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24வது அமர்வில், இலங்கை பயணம் குறித்த வாய்மொழி அறிக்கையை ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ளார்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24வது அமர்வு நாளை தொடக்கம், வரும் 27ம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றவுள்ள ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சிறிலங்காவில் தான் சந்தித்த மனிதஉரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் மற்றும் பதிலடி குறித்த விவகாரத்தை முன்னிலைப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ,நா மனிதஉரிமைகள் பேரவையில் நவநீதம்பிள்ளை நிகழ்த்தவுள்ள 4000 சொற்களைக் கொண்ட உரையில், இலங்கை உள்ளிட்ட 20 நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை குறித்து விபரிக்கவுள்ளார்.  இலங்கை பயணத்தை அடுத்து ஐ.நாவுக்கு அவர் சமர்ப்பிக்கவுள்ள முதலாவதும் சுருக்கமானதுமான அறிக்கை இதுவாக இருக்கும்.

No comments

Powered by Blogger.