Header Ads



அரபு நாட்டு சஞ்சிகைகள் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்துகின்றன - மஹிந்த

(Gtn) இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் அரபு நாடுகளில் சஞ்சிகைகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் நன்மதிப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் சில அரபு நாடுகளின் விமான நிலையங்களில் சஞ்சிகைகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இது தொடர்பில் கண்காணிக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஊடகவியலாளர்களை ஜனாதிபதி சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார். சிங்கள மக்கள் முஸ்லிம் பெண்களை தாக்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விநியோகம் செய்யப்படும் சஞ்சிகையை ஜனாதிபதி, ஊடகவியலாளர்களிடம் காண்பித்துள்ளார்.

2 comments:

  1. ஏனைய நாடுகள் மட'டும் இலங்கைக்கு கீர்த்தியை தரும் வகையில் செய்திகள் வெளியிடுகின்றன என்று யார் சொன்னார்கள்.

    இந்த அரபுநாட்டு பத்திரிகையின் 'அபகீர்த்தி' செய்தியில் எமது மான்புமிகு அமைச்சர்களில் யாருக்கு வேட்டு விழப்போகிறதோ என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  2. அரபு நாட்டுப் பத்திரிகைக்கு ஏன் செல்ல வேண்டும்? ஐ.நா.வின் அதிகாரி நவநீதம்பிள்ளையுடன் வாழ ஆசைப்பட்ட உங்களின் அமைச்சரவை உறுப்பினர் மேர்வின் அவர்களின் கலியாண ஆசையே உங்களுக்கும், உங்கள் அரசாங்கத்திற்கும், எமது தாய் நாட்டிற்கும் அபகீர்த்தி ஏற்படுத்துவதற்கு போதுமாகி விட்டதே..?

    இந்தக் 'கல்யாண ராமன்' விவகாரம் குறித்து ஏன் நீங்கள் இதுவரை மூச்சும் விடவில்லை?

    இதையும் எந்த ஐ.நா. பிரதிநிதியும் உங்களிடம் எடுத்துரைக்கவில்லையா?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.