Header Ads



இலங்கை தொடர்பான நவநீதம் பிள்ளையின் அறிக்கையை ஏற்கமுடியாது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் வாய்மொழி மூல அறிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் தற்போது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றது.

அமர்வுகளில் நவனீதம்பிள்ளை அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

எனினும், இந்த அறிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரவினாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோர நவனீதம்பிள்ளைக்கு அதிகாரங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை விவகாரம் குறித்து அவசர அவசரமாக கவனம் செலுத்த வேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு ஊக்கமளிக்க வேண்டுமே தவிர, அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மோசமாகக் காணப்படுவதாக நவனீதம்பிள்ளை வெளியிட்ட கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ரவிந்திரநாத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.