Header Ads



மாகானசபைத் தேர்தலும், முஸ்லிமகள் நடந்து கொள்ள வேண்டிய விதமும்

(மௌலவி முனாப் நுபார்தீன்)

முப்பதாண்டுகால முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்த அடுத்த நிமிடத்திலிருந்தே அரசு தனது அடக்குமுறைகளை முஸ்லிம்களை நோக்கி நகர்த்த ஆரம்பித்துள்ளது என்பதனை நாம் நாளாந்தம் அறிந்து வருகின்றோம். அரசுக்கு நேரடியாக இத்தகைய தீவிரவாத செயல்களில் ஈடுபட முடியாத காரணத்தினால் குறிப்பாக அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்படவே என்று பொதுபலசேனா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பல பள்ளிவாயல்கள் தகர்க்கப்பட்டுள்ளது இதனையும் நாம் அறிந்தே வைத்திருக்கின்றோம். இந்நிலையில் மூன்று மாகானங்களுக்கான மாகானசபை த்தேர்தலை நடாத்துவதற்கு அரசு முன்வந்துள்ளது.

ஒவ்வொரு கட்சியும் தாம் மட்டும்தான் யோக்கியர்கள் தங்களை மட்டும்தான் ஆதரிக்க வேண்டும் என்று ஊர் ஊராகக் கூக்குரலிடுவார்கள். அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் சில முஸ்லிம் கட்ச்சிகளும் தமக்கு பிச்சைப் போடும் பச்சை, நீலக் கட்ச்சிகளைக் கவ்விக் கொண்டு தாங்கள்தான் இலங்கை முஸ்லீம்களின் ஏகப் பிரதிநிதிகள் எனவே முஸ்லீம்கள் நாங்கள் சொல்கின்ற கட்ச்சியைத்தான் ஆதரிக்க வேண்டும் என்றும் கூப்பாடு போடுவார்கள். இவர்கள் அனைவரும் தங்களது சுயநலத்துக்காக இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் அடகு வைத்து வாழ்க்கை நடத்துபவர்கள் என்பதனை நாம் நன்கு தெரிந்தே வைத்துள்ளோம்.

இந்த நாட்டில் முஸ்லீம் சமூகத்தின் எதிர்காலம் , எதிர்காலத்தில் அவர்களின் அரசியல் நிலை எப்படி இருக்க வேணடும்? அவர்களின் ஜனநாயக அரசியல் போராட்டம் எப்படி அமைய வேண்டும், இந்த நாட்டில் ஆட்ச்சியாளர்களாலும், அராஜகவாதிகளாலும் முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்ட, இன்னும் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் துரோகங்களுக்கும், துயரங்களுக்கும் காரணம் என்ன? ஏனைய சமூகங்களுடனான அவர்களின் உறவு எப்படி அமைய வேண்டும்? முஸ்லீம் மக்களுக்கிடையில் காணப்படும் அரசியல் ரீதியிலான முறன்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவது எப்படி? அதன் அவசியம் எத்தகயது? என்ற பலதரப்பட்ட கேள்விகளுக்கு விடை காணாமல், முஸ்லீம் மக்கள் பற்றிய கரிசனை என்பது போலித்தனமானது மட்டுமின்றி கேலிக்குரியதுமாகும்.

இலங்கை சுதந்திரம் பெற்று இன்று 65 வருடங்களை கடந்த பின்பும் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகள் திட்டமிட்டு மறுக்கப்பட்டும், பறிக்கப்பட்டும்; கொண்டிருகின்றன, இலங்கை முஸ்லீம்களை சகல துறைகளிலும் நலிவுற்ற ஒரு சமுதாயமாக  ஆக்குவதற்கான அனைத்து செயற் திட்டங்களையும்; இந்த நாட்டை மாறிமாறி ஆட்சி செய்து வரக்கூடிய இரு கட்சிகளும் எக்குறையுமின்றி மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் கட்சிதமாக செய்து வந்திருக்கின்றன என்பதனை நாமனைவரும் நன்கு அறிவோம், இலங்கை முஸ்லிம்கள் தங்களது எதிர்காலம் பற்றி மிகவும் அச்சப்படுகின்ற சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

 இவையனைத்திற்கும்; முதல் முக்கிய காரணம் முஸ்லிம்கள் தங்களுக்குள் அரசியல் ரீதியாகவும், ஆன்மீகரீதியாகவும் பல பிரிவுகளாகப் பிரிந்து காணப்படுவதாகும். அவர்கள்;. எப்பொழுது சுயநலமிக்க, மரம் விட்டு மரம் தாவும் இந்த அற்ப்ப அரசியல்வாதிகளுக்குப் பின்னால் செல்லாது எக்காலத்திற்கும் பொருத்தமான வழிகாட்டல்களைத் தன்னகத்தே கொண்டுள்ள அல்-குர்ஆன், அல்-ஹதீஸின் நிழலில் ஒன்றுபடுவார்களோ அன்றுதான் நம் முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் நம்பிக்கைமிக்க, அச்சமில்லா எல்லா உரிமைகளும் கிடைக்கப் பெற்ற சமுதாயமாக மாறுவார்கள்.

முஸ்லிம்களை எந்தவொரு அரசியல்வாதியோ, கட்சியோ, இயக்கமோ, குழுவோ பாதுகாக்க முடியாது. மாறாக இஸ்லாமும் அதன் கொள்கைகளும்தான் இலங்கை முஸ்லிம்களை மட்டுமல்ல உலக முஸ்லிம்களையே பாதுகாக்கவல்லது இதுதான் ஒரு உண்மை முஸ்லிமுடைய விசுவாசமுமாகும். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் புறந்தள்ளிவிட்டு வெறும் இனம், சமூகம், தேசியம், பிரதேசம், இயக்கம், கட்ச்சி என்ற உணர்ச்சிகளின் அடிப்படையில் மட்டும் செயல்;படும் எந்தவொரு தனிமனிதனோ, குழுவோ, இயக்கமோ, அரசியல் கட்சியோ, எம்மைப் பாதுகாக்கவோ, எமது உரிமைகளை வென்று தரவோ போவதில்லை என்பதுதான் எமது நம்பிக்கை. என்றாலும் எந்நிலையிலும் எமது வாக்குகள் வீணடிக்கப்பட அனுமதிக்க முடியாது. அது எமக்கு ஆபத்துக்கு மேல் ஆபத்தாகவேதான் அமையும்.

எனவே நடைபெறவிருக்கின்ற மாகானசபைகளுக்கான தேர்தலில் குறித்த மாகானங்களில் வாழுகின்ற முஸ்லீம்கள் தங்களது சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தாம் எந்த கட்சியை ஆதரித்தால் தங்கள் பிரதேச முஸ்லிம்களுக்கு ஆரோக்யமாக அமையும் என்பதைக் கவனித்து வாக்களிக்க வேண்டும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் இந்த கட்சியைத்தான் ஆதரித்தாக வேண்டும் என்று குறிப்பிட்டடு சொல்ல முடியாது காரணம் அனைத்து கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான். நீல கட்சியை விட பச்சை கட்சி சிறந்ததோ அல்லது இன்ன கட்சியை விட இன்ன சட்சி சிறந்ததோ என்று கூற முடியாது அப்படி யாராவது இன்ன கட்சியை விட இன்ன சட்சி சிறந்தது என்று கூறினால் அவர் பொய் சொல்கிறார் என்பதனை நாம் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

இந்த அரசியலால் அல்லது இந்த அரசியல்வாதிகளால் நிச்சயமாக எம்மைப் பாதுகாக்கவோ அல்லது எமது உரிமைகளை வென்றடுக்கவோ முடியாது. நாம் எம்மையும் எமது உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாகவிருந்தால் நாம் அரசியலுக்கு அப்பால் நின்று ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபடுதல் அவசியமாகும்.

இதன் பொருள் அரசிய வேண்டாம் என்பது அல்ல அரசியல்வாதிகளால் இதனை சாதிக்கும் நிலையில் இன்றைய அரசியல் இல்லை. அது முடியாத கருமம் நமது வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் எதை வேண்டும் என்றாலும் சொல்வார்கள் ஆனால் நிச்சயமாக அவர்களால் அவர்கள் சொல்வதை செய்ய முடியாது என்பதற்கு கடந்தகால அரசியல் வரலாறு சான்றாகவுள்ளது.

எனவே என்றும் போல் அரசியல்வாதிகள் அவர்களின் பனியை செய்து கொள்ளட்டும் அது அவர்களின் உரிமை அதை நாம் ஆட்சேபிக்க முடியாது என்றாலும் அரசியலுக்கு அப்பால் மாத்திரமின்றி இயக்கங்களுக்கு அப்பாலும் சென்று நாம் ஒன்றுபட வேண்டும் என்றே கூறுகின்றேன்.

நாம் எமக்கு மத்தியில் காணப்படும் குறுகிய அரசியல் வேறுபாடுகள், சுயகௌரவம், கட்ச்சிபேதம் இயக்க வேறுபாடு போன்றவைகளை புறந்தள்ளி நம் சமூக நலனை மட்டும் நோக்காகக் கொண்டு நம் சமூகத்திற்காக விட்டுக்கொடுத்து புரிந்துணர்வுடன் செயல்பட்டு நாம் தோற்றாலும் நம் சமூகம் வெற்றிபெற வேண்டும் எனும் உயர் இலச்சியத்தின் அடிப்படையில்; ஒன்றுபட்டாக வேண்டியது இன்றைய சூழ்நிலையில் நமது தவிர்க்க முடியாத முக்கிய பொறுப்பும், கட்டாய கடமையுமாகும். கட்சியா? சுமூகமா? அல்லது இயக்கமா? சமூகமா? ஏன்ற நிலை ஏற்பட்டால் நாம் எதனைத் தெரிவு செய்வது என்பதில் நாம் தெளிவு பெறவேண்டு.

வல்ல அல்லாஹ் கூறுகின்றான்:
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; நீங்கள் பொறுமையாக இருங்கள் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (அல்-குர்ஆன்: 8: 46)   
இங்கு வல்ல அல்லாஹ் மூன்று முக்கிய விடயங்கள் பற்றி வலியுறுத்துகின்றான்.
அவைகளாவன:
1.    அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் நாம் முழுமையாக வழிப்பட்டு நடக்க வேண்டும்
2.    எந்நிலையிலும் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து விடக்கூடாது
3.    அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்படுவதிலும், கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்ற வேளைகளில் பிரிந்து விடாதிருப்பதிலும் பொறுமையைக் கைகொள்ளுதல்.
இவைகளுக்கு மாறு செய்யும் போது ஏற்படவுள்ள அபாயங்கள் இரண்டினையும் வல்ல அல்லாஹ் அதன் தொடரில் அறிவுறுத்துகின்றான்.
1.    கோழைகளாகி விடுதல்.
2.    பலம் குன்றி பலஹீனர்களாகி விடுதல்.
இதனைத்தான் இன்றைய இஸ்லாமிய சமூகம் உலகளாவிய ரீதியில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது

இன்னும் வல்ல அல்லாஹ் எமது ஒற்றுமையின் அவசியம் பற்றி கூறும் போது, நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருட் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. (அல்-குர்ஆன்: 3: 102,103)

மேற்படி ஒரே வசனத்தில் ஒற்றுமையினை வலுப்படுத்திக் கொள்ளுமாறு கட்டளையிட்ட வல்ல அல்லாஹ் அதன் தொடரிலேயே பிரிந்துவிட வேண்டாம் என்று எச்சரிப்பதும் நாம் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சமாகும். அத்துடன் இந்த வசனங்களின் மூலம் வல்ல அல்லாஹ் இன்னும் சில முக்கிய விடயங்களையும் எமக்குக் கட்டளையிடுகின்றான்.
அவைகளாவன.

1.    ஒவ்வொரு தனிமனிதனும் தக்வா சார்ந்த வாழ்க்கையினை வாழ்தல்.
2.    மரணம் வரைக்கும் முஸ்லிமாகவே செயல்படுதல்.
3.    அல்-குர்ஆன், அல்-ஹதீஸின் நிழலில் ஒன்றுபட்டிருத்தல்.
4.    எந்நிலையிலும் பிரிந்து விடாது ஐக்கியமாகவும் ஒற்றுமையாகவும் இருந்து கொள்ளுதல்.
5.    அல்லாஹ் எமக்கு செய்திருக்கும் அருட்பேறுகளை நினைவு கூர்தல்.

மேற்படி இறைவசனங்களிலிருந்து இன்றைய எமது பலஹீனத்திற்கான காரணங்களை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. அதுதான் எமக்குமத்தியில் காணப்படும் குறுகிய மனப்பான்மை காரணமாக ஏற்பட்டுள்ள ஒற்றுமையிண்மை, மற்றும் கட்டுப்படாமையாகும், எனவே நாம் எமக்கு மத்தியில் காணப்படும் குறுகிய அரசியல் வேறுபாடுகள், சுயகௌரவம், கட்சிபேதம் போன்றவைகளை புறந்தள்ளி நம் சமூக நலனை மட்டும் நோக்காகக் கொண்டு நம் சமூகத்திற்காக விட்டுக்கொடுத்து புரிந்துணர்வுடன் செயல்பட்டு நாம் தோற்றாலும் நம் சமூகம் வெற்றிபெற வேண்டும் எனும் உயர் இலச்சியத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டாக வேண்டியது இன்றைய சூழ்நிலையில் நமது தவிர்க்க முடியாத முக்கிய பொறுப்பும், கட்டாய கடமையுமாகும்.

2 comments:

  1. நல்ல கட்டுரை இது.எமது பிரச்சிணைகளும் அதற்கான காரணங்களும் தெளிவாக குர் ஆன் அடிப்படியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்பிரகாரம்,அரசியல் வாதிகளும் பொது மக்களும் நடந்து கொள்ளவேண்டும். இதையே நாமும் எவ்வேளையிலும் சொல்லிக்கொண்டே வருகிறோம். அனைத்து பிரச்சிணைகளுக்கும் தீர்வு வைத்த எம்மார்க்கம் நம் பிரச்சிணைகளுக்கு ஒரு தீர்வை வைக்காமலா இருந்திருக்கும்?எனவே முஸ்லிம்கள் முஸ்லிம்களாக இருங்கள் "ஈமான் கொண்டவர்களே! ஈமான் கொள்ளுங்கள்-குர் ஆன்". ஈமான் கொண்டவர்களைப்பார்த்தே ஈமான் கொள்ளுங்கள் என்று இறைவன் குறிப்பிடுகிறான் என்றால் என்ன அர்த்தம்?தொடெர்ந்து ஈமான் கொண்டவர்களாகவே மூமிங்களாகவே இருங்கள் பராமுகத்தில் இருந்து விடாதீர்கள் என்றுதான் அர்த்தம். எம்மவர்களில் அரசியல் வாதிகள் உட்பட எத்தனை பேர்தான் ஐவேளை கடமையை செய்கிறார்கள்?மிக அரிது.இஸ்லாத்திற்கு அப்பால் வாழ்ந்து வரும் எம் இஸ்லாமிய அரசியல் கட்சிகளை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு முடிவுக்கு வர எத்தனிக்க வேண்டும்.நாட்டிற்கும் எம் சமூகத்திற்கும் நல்லதென்று என்னி சில விடயங்களை சிலர் அதில் விட்டுக்கொடுக்க வேண்டும். எல்லோருமே தலைவர்களாக இருந்து விட முடியாது. அப்போ யார்தான் தலைவர்? சிறந்த மார்க்க அறிவும் ஈமானும் இறையச்சமுமுள்ள ஒரு மூமினை முஸ்லிம்களே தெறிவு செய்ய்ய வேண்டும். இந்த தகுதியான தலைவனை தெறிவு செய்ய பொது மக்கள் உண்மை முஸ்லிம்களாக இருந்தாலே போதும், ஆனால் கவலை, அவர்களும் அவ்வாறில்லை. இப்படி எல்லா முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் ஒன்று சேர்த்து சந்திக்க வைக்கும் நிகழ்வை ஏதும் ஒரு சமூக தேசிய இஸ்லாமிய நலன் சார்ந்த ஒரு அமைப்பொன்று உருவாகி செயற்படுத்தலாம் என்பது எம் ஆலோசனை. செய்வார்களா இதனை?

    ReplyDelete
  2. உங்கள் கருத்துக்கு எனது மனநிறைவான நன்றிகள். ஊண்மையில் அப்படியான ஒரு சிறந்த தலைமைத்துவத்தினை நோக்காகக் கொண்டுதான் எமது அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் தனது செயற்திட்டங்களை முன்னெடுத்துக் கொணடிருக்கின்றது.
    எனவே இப்படியான எமது கருத்துடன் உடன்படக்கூடியவர்கள் எம்மோடு இணைந்து செயல்படலாம் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் எப்பொழுது நாடுகின்றானோ அப்போது எமது இலட்சியம் நிறைவேற்றப்பட்டு எமது இலக்கும் அடையப்படும்.

    ReplyDelete

Powered by Blogger.