பொதுபலசேனா விரைவில் ஓரங்கட்டப்பட்டுவிடும் - இது உதுமாலெப்பையின் நம்பிக்கை
(எம்.எம்.ஏ.ஸமட்)
பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புக்கள்; பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் மத்தியிலிருந்து மிக விரைவில் ஓரங்கட்டப்பட்டுவிடும் என தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
18ஆம் திகதி நள்ளிரவு குருநாகல் சியம்பலாகஸ்கொட்டுவ பிரதான வீதியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மடைதிரண்ட வெள்ளம்போல் வந்திருந்த மக்கள் மத்தியில் சிங்கள மொழியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்நாட்டில் வாழும் ஒரு இனத்துக்கு மாத்திரம் பயங்கரவாதமும் யுத்தமும் அழிவுகளை ஏற்படுத்தவில்லை. மாறாக, பயங்கரவாதத்தினாலும் யுத்தத்தினாலும் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரை சகல சமூகங்களும் பல அழிவுகளைக் கண்டன. குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் நிம்மதி, சுதந்திமற்ற நிலையில் தமது வாழ்நாளைக் கழித்துக்கொண்டிருந்தனர்.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான அதாவுல்லா இரு கோரிக்கைகளை முன்வைத்தார். அதில் முதலாவது கோரிக்கை இந்நாட்டிலிருந்து பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டும். இரண்டாவது கோரிக்கையாக வடக்கிலிருந்து கிழக்கு பிரிக்கப்பட்டு கிழக்கில் வாழும் மூவின மக்களும் அவர்களின் பிரதிநிதிகளினூடாக அவர்களது பிரதேசங்களை அபிவிருத்தியை அடையச் செய்வதுடன் இம்மக்கள் என்றும் சகோதர வாஞ்சையுடன் நிம்மதியாக வாழ வழி செய்ய வேண்டும் என அமைச்சர் அதாவுல்லா கேட்டுக் கொண்டார். இக்கோரிக்கைகள் நான்கு வருடங்களுக்குள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நிறைவேற்றப்பட்டமையை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதன் பயனாக இன்று வடக்கு, கிழக்கில் மாத்திரமின்றி முழு நாட்டிலும் வாழும் மூவின மக்களும் அச்சமின்றி நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இருப்பினும், வட கிழக்கு மக்களுக்கான முறையான அரசியல் தீர்வு இன்னும் காணப்படவில்லை. அரசியல் தீர்வைப் பெறுவதற்காக ஜனாதிபதியினால் பாராளுமன்றத் தெரிவுக்கு உருவாக்கப்பட்டு அதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எல்லா இனங்களும் ஏற்றுக்கொள்ளத்தக்கதான அரசியல் தீர்வொன்றினை எதிர்பார்த்துள்ளனர்..
இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் எதுவுமில்லை என்று நாங்கள் சொல்லவில்லை. அண்மைக்காலமாக சகோதரப் பற்றுடன் சிங்கள மக்களுடன் வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேன போன்ற இனவாத அமைப்புக்கள் முஸ்லிம் மக்களுடைய மனங்களைப் புண்படுத்தக் கூடிய அநியாயங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களின் நோக்கம் இந்நாட்டில் சிங்கள-முஸ்லிம் இனக்கலவரத்தை ஏற்படுத்துவதாகும். முஸ்லிம்கள் பற்றி பிழையான கருத்துக்களை சிங்கள மக்கள் மத்தியில் கூறி நிரந்தரமாக சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் பகைவர்களாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
பயங்கரவாதம் இந்நாட்டிலிருந்து எவ்வாறு ஒழிக்கப்பட்டதோ அவ்வாறு இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் மனங்ளை வேதனைப்படுத்தும் கைங்கரியங்களைப் புரிகின்ற பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புப்களும் சிங்கள சமூகத்தின் மத்தியிலிருந்தும் இந்நாட்டிலிருந்தும் மிக விரைவாக அகற்றப்பட்டு விடும். பெரும்பான்மையான பௌத்த மக்களும் பௌத்த குருமார்களும் இனவாத அமைப்புக்களின் நடவடிக்கைகளை ஆதரிக்கவில்லை. அவர்களின் நச்சுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. வடக்கு மற்றும் கிழக்கிற்கு வெளியே பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் சிறுபான்மை இனமாக வாழும்

முஸ்லிம்களுடன் சிங்கள மக்கள் ஒட்டிவுறாடுவதை எங்களால் இந்த குருநாகல் மாட்டத்தில் காண முடிகிறது.
இந்நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் வாழும் முஸ்லிம்கள் மிகவும் நிதானமாகவும் புத்திசாதுரியமாகவும் நடந்துகொள்ள வேண்டும். தேர்தல் காலத்தில் வாக்குகளைப் பெறுவதற்காக உங்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பொறுப்பற்ற வார்த்தை ஜாலங்களால் மூளைச் சலவை செய்யும் முஸ்லிம் காங்கிரஸ் காரர்களின் பேச்சுக்களை நம்ப வேண்டாம் என்;று இப்பிரதேச முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
நடைபெறவுள்ள வடமேல் மாகாணசபைத் தேர்தலில் வெற்றிலையின் வெற்றி நிச்சயமாகிவிட்டது. அதனால் மரத்துக்கோ யானைக்கோ வாக்களிப்பதனால் எதையும் குருநாகல் மாவட்ட மக்கள் அடையப்போவதில்லை. உங்கள் வாக்குகள் பலமானவை. சக்திமிக்க அந்த வாக்குகளை மரத்துக்கும் யானைக்கும் அளித்து பலவீனப்படுத்த வேண்டாம். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி இவ்வடமேல் மாகாண சபையில் வெற்றிபெறும்போது, அதில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதியும் இருந்தாக வேண்டும். அதற்கு உங்களது வாக்குப்பலத்தைப் பயன்படுத்த வேண்டும்.
இக்குருநாகல் மாவட்டத்திலிருந்து ஒரு முஸ்லிம் பிரதிநிதியை ஆளும் கட்சியினூடாக தெரிவு செய்து நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யபடாதிருக்கின்ற நமது முஸ்லிம் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு உங்களுக்காக உங்களது ஆணைகளைக் கோரி கடந்த 14 வருட காலமாக நாங்கள் கிழக்கு மாகாணத்திலிருந்து வந்து வேண்டியிருக்கின்றோம் இன்றும் இறுதியாகக் கிடைத்துள்ள இச்சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்துமாறு வேண்டுகின்றேன்.
கிழக்கு மாகாணத்தில் கடந்த 30 வருடங்களாக யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கடந்த 2008, 2012ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரு மாகாண சபைத் தேர்தலின்போது தேசிய காங்கிரஸ் வாக்குப் பலத்தின் மூலம் பெற்றபட்ட எனது அமைச்சுப் பதவி ஊடாக கிழக்கு மாகாணம் முழுவதும் இன பேதமின்றி அபிவிருத்திப் பணிகளைப் புரிந்து வருகின்றேன். அபிவிருத்தியினூடாக சமாதான சகாழ்வு அம்மாகாணத்தில் வாழும் மூவின
மக்களிடையெ கட்டியெழுப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதே முன்னுதாரணமாகக் கொண்டு குருநாகல் மாவட்ட மக்கள் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன். இந்நாட்டில் வாழும் எல்லா இனங்களுக்குகிடையிலும் பிரச்சினைககள் இருக்கின்றன. பிரச்சினைகள் உள்ளதென்பதற்காக ஒரு இனத்தை ஒரு இனம் பகைத்துக்கொண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. முஸ்லிம்களை வாக்குகளுக்காக ஒவ்வொரு தேர்தலிலும் அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் பகைவர்களாக காட்ட முஸ்லிம் காங்கிரஸ் முற்படுகிறது.
இவ்வாறு இனவாதக் கருத்துக்களையும் அரச விரோப் பேச்சுக்களையும் வாக்குகளுக்காக கூறி வருகின்ற முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் 21ஆம் திகதிக்குப் பின்னர் அரசாங்கத்தினுடனேயே ஒட்டிக்கொண்டிருக்கப் போகிறது. அதனால் மு.கா.வின் தலைமையினதும் அக்கட்சிக்காரர்களினதும் செயற்பாடுகளுக்கு இக்குருநாகல் மாவட்ட மக்கள் ஒருபோதும் துணைபோகாது இத்தேர்தலிலாவது அவர்களின் சுயரூபத்தைக் கிழித்துக்காட்ட வேண்டும் எனக் கூற விரும்புகின்றேன.
அத்துடன, இக்குருநாகல் மாவட்ட முஸ்லிம் கிராமங்கள் அபிவிருத்தியடைய வேண்டுமாயின,; இம்மாவட்ட முஸ்லிம்களின் அரசியல் ரீதியான தேவைகள் நிறைவேற வேண்டுமாயின், அரசாங்கத்தோடு இணைந்து அரசாங்கத்தைப் பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அத்தேவையை நிச்சயம் இம்மாவட்ட மக்கள் நிறைவேற்ற வேண்டுமென வேண்டிக்கொள்வதாக அமைச்சர் உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்

இப்படியே கனவு கண்டுகொண்டிருங்கள்,பொது பல சேனா நாளுக்குநாள் வளர்த்துக்கொண்டுதான் செல்கிறது,நீங்களும் மடையராகி, மற்றைய முஸ்லிம்களையும் மடையராக்கி விட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருங்கள் கிணற்றுத்தவளையாக இல்லாமல் வெளியில் என்ன நடக்கிறது என்று கொஞ்சம் பாருங்கள்,இந்த அரசியல்வாதிகள் சரியான மாங்காய் மடையார்கள்
ReplyDeleteபொதுபல சேனா என்ன பஸ் வண்டியா
ReplyDelete