ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லண்டனில் அவசரமாக தரையிறக்கம் - இருவர் கைது
நேற்று லண்டன் ஹீத்ரோ விமானநிலையம் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம், அதில் பயணித்த இருவர் விமானத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்ற சந்தேகம் ஏற்படவே, இடையில் கிழக்கு லண்டனில் உள்ள ஸ்டான்டெட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது இதுகுறித்து தெரியவருவதாவது,
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏ 330 என்ற இலக்கமுடைய விமானம் கொழும்பில் இருந்து நேற்று 267 பயணிகளுடன் லண்டன் ஹீத்ரோ விமானநிலையம் நோக்கி புறப்பட்டது.
இந்தநிலையில் அதில் பயணித்த இருவர் விமானத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்ற சந்தேகம் ஏற்படவே, விமானம் அவசரமாக கிழக்கு லண்டனில் உள்ள ஸ்டான்டெட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இதனையடுத்து விமானத்துக்குள் பிரவேசித்த எசெக்ஸ் நகரப் பொலிஸார் அங்கு விமானத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட இரண்டு பேரையும் கைதுசெய்தனர். எனினும் அவர்கள் இருவரும் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விடயம் வெளியாகவில்லை.
இதன்போது பயணிகளும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்கள் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு மாற்றப்பட்டனர். இந்தநிலையில் கைதுசெய்யப்பட்ட இரண்டு பேர் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.

Post a Comment