Header Ads



காத்தான்குடி மஸ்ஜிதுல் குலபா-இர்-றாஷிதீன் பள்ளிவாயல் புதிய நிருவாக சபை தெரிவு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு -காத்தான்குடி 3ம் குறிச்சி, ஊர் வீதியில் அமையப்பெற்றுள்ள மஸ்ஜிதுல் குலபா-இர்-றாஷிதீன் பள்ளிவாயலின் புதிய நிருவாக சபைத் தெரிவு 6-9-2013 நேற்று  வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன உறுப்பினர்களினதும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பிராந்திய பொறுப்பாளர் அஷ்ஷெய்க்.ஏ.எல். ஜுனைத் (நளீமி)யினதும் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பின்வரும் 15 பேர் கொண்ட  புதிய நிருவாக சபை உறுப்பினர்கள் ஏக மானதாக தெரிவு செய்யப்பட்டனர்.

புதிய தெரிவு செய்யப்பட்ட நிருவாக சபை உறுப்பினர்களின் பெயர் விபரம் பின்வருமாறு (தலைவர்)அல்ஹாஜ்.ஏ.எல்.பதுர்தீன், (உபதலைவர்) அல்ஹாஜ்.ஏ.எல்.எம்.ஜாபிர், (உபதலைவர்) ஜனாப்.எம்.எல்.ஏ.லதீப், (செயலாளர்) ஜனாப்.ஐ.எல்.எம்.மாஹிர், (உபசெயலாளர்)  மௌலவி.அல்ஹாஜ்.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத்(ஹாஷிமி), (பொருளாளர்) அல்ஹாஜ்.ஐ.எல்.கே.முஹம்மத் மற்றும் நிருவாக சபை உறுப்பினர்களாக அல்ஹாஜ்.எம்.எச்.எம்.அலியார், அல்ஹாஜ்.ஏ.எல்.எம்.சபாஹிர், அல்ஹாஜ்.எம்.ஏ.சீ.நூர்தீன் அல்ஹாஜ்.எம்.ஐ.எம்.முஸ்தபா, அல்ஹாஜ்.எச்.எம்.ஆதம்லெப்பை , அல்ஹாஜ்.ஏ.சீ.ஸஹீட், அல்ஹாஜ்.எம்.பீ.எம்.அன்வர், அல்ஹாஜ்.யூ.எல்.எம்.எம்.இப்ராஹீம், அல்ஹாபிழ்.எம்.எஸ்.எம்.இர்பான் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்;டுள்ளனர்.

No comments

Powered by Blogger.