Header Ads



இந்த தலைவன் இருக்கும் வரை..!

தாம் இருக்கும் வரையில், நாட்டை பிரிக்க ஒருவருக்கும் இடம் அளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டி, திகன பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

நாட்டின் ஐக்கியத்தை கட்டி எழுப்பியுள்ளோம். இன்று பலருக்கு நாட்டை பிரிக்கும் எண்ணம் உள்ளது. இதில் இருந்து அவர்கள் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது புரிகிறது. அவர்களுக்கு தெரியாது, இந்த நாட்டை பிரிப்பதற்கு, இந்த தலைவன் இருக்கும் வரை அது இயலாத காரியம் என்பதனை ஞாபகமூட்ட விரும்புகிறேன்.

இதனிடையே, பிரபாகரனால் செய்ய முடியாததை, வேறு ஒருவராலும் செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். பிரபாகரனால் பிரிக்க முடியாது போன வேலையை, இப்போது இருக்கும் ஒருவரால் முடியாது என்பதை நான் தெளிவாக கூறுகிறேன்.

2 comments:

  1. இந்த தலைவன் இருக்கும் வரை நாட்டில் துவேஷம் நிக்காது, நாடு உருப்படாது

    ReplyDelete
  2. யா அல்லாஹ் உன்னை மறந்து மமதையில் தத்தளிக்கும் இக்கொடியவர்கள் குடும்பத்திற்கு நல்லதொரு தீர்ப்பை தருவாய் என்று உன்னையே நம்பியுள்ளோம் ரஹ்மானே,, உனது இல்லங்களில் கைவைத்து விளையாடிய இக்கயவர்களுக்கு நீ நல்லதொரு தீர்ப்பை வழங்குவாயென்று நாங்கள் உன்னையே எதிர்பார்த்தவண்ணமுள்ளோம். பொறுமையுடன் உள்ளோம் எமது பொறுமைக்காவது நீ நல்லதொரு முடிவைத்தருவாயென காத்திருக்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.