இலங்கையிலிருந்து ஹஜ் செல்ல விண்ணப்பித்தவர்களின் அவசர கவனத்திற்கு
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
இவ்வருடம் புனித ஹஜ் கடமைக்காக இலங்கையில் சுமார் 2240 ஹாஜிகளுக்கு மட்டுமே அனுமதியை சவுதி அரசாங்கம் வழங்கியுள்ளது. இதற்கமைவாக திணைக்களத்தில் ஹஜ் கடமைக்கு செல்வதற்காக விண்ணப்பித்தவர்களின் புதிய விண்ணப்ப இலக்கப்படி 3900 வரையான விண்ணப்பங்களுக்கே ஹஜ் கடமைக்குச் செல்ல அனுமதியை திணைக்களம் வழங்கி அவர்களுக்கான கடிதங்களும் தபாலில் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு 3900 வரையான விண்ணப்பதாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டபோதிலும் அவர்களில் சிலர் இன்னும் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு ஹஜ் கடமைக்குச் செல்வதை உறுதிப்படுத்தவில்லை என்பதனால் இவர்களுக்கு எதிர்வரும் செப்படம்பர் 15ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அடுத்த இலக்கத்தையுடைய விண்ணப்பதாரிக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் தெரிவிக்கின்றார்.
எனவே திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளாதவர்கள் உடன் தொடர்பு கொண்டு தமது விருப்பத்தை தெரிவிக்கும் பட்சத்தில் அடுத்தவர் செல்வதற்கு இலகுவாக இருக்கும் எனவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
thodarpu kollavendiya number
ReplyDelete