Header Ads



இஸ்ரேல் தூத­ரகம் இலங்கையில் திறக்­கப்­ப­ட­வுள்­ளது - முஜிபுர் ரஹ்மான்

இஸ்­ரேலின் தேவைக்­கா­கவே பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ இலங்­கையில் முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் குறித்து பிர­சா­ரங்­களை மேற்­கொள்­கின்றார். ஆகவே இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக திட்­ட­மிட்டு வன்­மு­றை­களும் தாக்­கு­தல்­களும் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் மேல் மாகாண சபை உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

பள்­ளி­வா­சல்கள் உடைப்­பது ஜனா­தி­ப­திக்கு சிறிய பிரச்­சி­னையாம். வர­லாற்றில் எந்­த­வொரு அரச தலை­வரும் மேற்­கொள்­ளாத இன­வா­தத்­தையே ஜனா­தி­பதி முன்­னெ­டுக்­கின்றார். ஆகவே அனைத்து முஸ்லிம் மக்­களும் அரசாங்­கத்தை தெரிந்து வாக்­க­ளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் விசேட செய்­தி­யாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கி­ழமை ராஜ­கி­ரி­யவில் நடை­பெற்ற போதே முஜிபுர் ரஹ்மான் மேற்­கண்­ட­வாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் திட்­ட­மிட்டே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இதற்கு அரச அனு­ச­ரணை உள்­ளது. அண்­மையில் கொழும்பில் நடை­பெற்ற பாது­காப்பு மாநாட்டில் அனைத்து நாடு­களின் பாது­காப்பு அதி­கா­ரி­களின் முன்­னி­லையில் பாது­காப்புச் செய­லாளர் இலங்­கையில் முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் உள்­ள­தாக குற்றம் சுமத்­தினார். இது பார­தூ­ர­மான கருத்­தாகும்.

இஸ்ரேல் இதற்குப் பின்­ன­ணியில் உள்­ளதா என்றும் எண்ணத் தோன்­று­கின்­றது. பலஸ்­தீ­னத்தில் முஸ்­லிம்­களை கொலை செய்யும் இஸ்­ரே­லுடன் இலங்கை அரசு தற்­போது நெருங்­கிய தொடர்­பு­களை மேற்­கொண்­டுள்­ளது. இஸ்ரேல் தூத­ரகம் திறக்­கப்­ப­ட­வுள்­ளது. ஆகவே முஸ்லிம்கள் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்து அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் எனக் கூறினார்.

No comments

Powered by Blogger.