சிலருக்கு வேறு கதைகள் ஒன்றும் இல்லாத காரணத்தினால்..!
சிலர் இன்று நல்லாட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் மாத்திரமே கருத்துக்களை வெளியிடுவது, வேறு கதைகள் ஒன்றும் இல்லாத காரணத்திலேயே என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் மக்களுக்காக பாரிய வேலைகளை செய்துள்ளது. இவ்வாறான நிலையிலேயே அரசாங்கத்தின் மீது சிலர் இவ்வாறான கதைகளை தெரிவித்துவருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
வாரியபொலவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டில் ஜனாநாயகம், அகிம்சாவாதம் சீர்குழைந்துள்ளதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர். தெற்கு அது போல் வடக்கு மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் செயற்பட்டுள்ளதையும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார். sfm
Post a Comment