Header Ads



இங்கிலாந்தில் சுவாரஸ்யம், வைர கம்மலை விழுங்கிய கோழி - கொல்ல மனசில்லாத எஜமானி

இங்கிலாந்தில் பெண் ஒருவரது வைர கம்மலை அவர் செல்லமாக வளர்த்து வரும் கோழி விழுங்கிவிட்டது. ஆபரேஷன் செய்து எடுக்க முடியாது என்பதால் கோழி இயற்கையாக சாகும் வரை காத்திருக்க எஜமானி முடிவு செய்திருக்கிறார்.

இங்கிலாந்தின் பெர்க்ஷயர் பகுதியில் வசிப்பவர் கிளாரி லெனான் (38). இவர் வீட்டில் கோழி ஒன்றை செல்லமாக வளர்த்து வருகிறார். அதற்கு சாரா என்று பெயரிட்டுள்ளார். சாராவை தோளில் வைத்து கொண்டு வீட்டில் சுற்றிக் கொண்டிருந்தார். அப்போது, செல்ல சாரா திடீரென கிளாரியின் காதில் இருந்த கம்மலை கொத்தியது. எதிர்பாராத விதமாக கோழியின் தொண்டைக்குள் வைர கம்மல் சென்று விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்தார் சாரா.
இதை காதலர் ஆடம் கிளாரிக்கு அன்பு பரிசாக வழங்கி இருந்தார். அதனால் கோழியை உடனடியாக டாக்டரிடம் கொண்டு சென்றார். எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது, கோழியின் வயிற்றில் கம்மல் சிக்கி இருப்பது உறுதியானது. ஆனால், சிக்கலான பகுதியில் கம்மல் இருந்ததால் அதை ஆபரேஷன் மூலம் வெளியில் எடுக்க முடியாது என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.

கோழியின் இரண்டாவது இரைப்பையில் சிக்கியுள்ள வைர கம்மலை ஆபரேஷன் மூலம் அகற்றுவது கடினம். அப்படியே செய்தாலும் கோழியின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. உள்ளே கம்மல் இருந்தால் அதன் உயிருக்கு எந்த பாதிப்பும் வராது என்று டாக்டர்கள் கூறினர். அதனால் சாராவுடன் வீட்டுக்கு வந்து விட்டார் கிளாரி. இதுகுறித்து கிளாரி கூறுகையில், வைர கம்மல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் என் சாரா. அதை கொன்று கம்மலை எடுக்க எனக்கு மனமில்லை. சாரா அதிக பட்சமாக இன்னும் 8 ஆண்டு உயிர் வாழும். அது வரை காத்திருப்பேன்' என்று கூறியுள்ளார். 
 
கோழியாபிமானம் இதுதான். -

No comments

Powered by Blogger.