Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் சிங்களப் பத்திரிகைகளுக்கு இரு முகத்தை காட்டுகிறது

(ஆர். நாஜி)

குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் ஐ.தே.காவிற்கோ மு.கா.விற்கு வாக்களிக்க வேண்டாமென தேசிய காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளர் யூ.எல். உவைஸ் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்காக குருநாகல் மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் சத்தாரை குருநாகல் சியம்பலாகஸ்கொட்டுவவில்  நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
   
எதிர்வரும் 21ஆம்திகதி நடைபெறப் போகின்ற வடமேல் மாகாண சபைத்தேர்தல் குருநாகல் மாவட்ட முஸ்லிம்களைப் பொறுத்த வரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும், இந்த தேர்தலில் குர்நாகல் மாவட்ட முஸ்லிம்;கள் ஒவ்வொருவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். முஸ்லிம்களாகிய் நீங்கள் ஐ.தே.கட்சிக்கு அல்லது மு.காயிற்கு வாக்களிப்பதனால் குருநாகல் மாவட்ட முஸ்லிம்களின் குறைந்தது அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமா? என்று மனச்சாட்சியைத் தொட்டுக் கேழுங்கள்?

இத்தேர்தல் ஜனாதிபதியை மாற்றுகின்ற தேர்தல் அல்ல. இன்னும் ஜந்து வருடங்களுக்கு ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆட்சி வகிப்பார். அடுத்த ஜனாபதி தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்ஷா அல்லாஹ் மகத்தான வெற்றி பெறுவது திண்ணம்.

இத்தேர்தல் ஆழும் ஐ.ம.சு. முன்ணணியை மாற்றுகின்ற தேர்தலும் அல்ல. ஆழும் அரசாங்கம் இன்னும் நான்கு வருடங்களுக்கு ஆட்சியில் இருக்கும். இலங்கையில் வரலாற்றில் மூன்றில் இரண்டு பொரும்பான்மையைக் கொண்ட ஒரே ஒரு அரசாங்கம் இந்த அரசாங்கமாகும்.

இம்மாகாண சபைத்தேர்தலில் வடமேல் மாகாண சபையில் அரசாங்கம் மகத்தான வெற்றியை அடையும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. இந்த மகத்தான வெற்றியில் குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் உரிமையுடன் பங்காளிகளாக இருக்கவேண்டும் என்பதுதான் அவாவாகும். அவ்வாறு பங்காளிகளாக இணைந்து கொள்வதன் மூலம் குருநாகல் மாவட்ட முஸ்லிம்களின் எல்லா பிரச்சினைகளுக்கம் தீர்வுகாணமுடியும். நிவாரணம் பெற்றுக் கொள்ள முடியும்.

ஐ.தே.கட்சிக்கு வாக்களிப்பதனால் குருநாகல் மாவட்ட முஸ்லிம்களின் கல்விப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியுமா? பாதைகளை செப்பினிட முடியுமா? விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய முடியுமா? வைத்திய சாலையை தரடுயர்த்த முடியுமா? ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க முடியுமா? பள்ளிவாசல் கட்டடத்தை கட்ட முடியுமா? அரபுக்கல்லூரிகளை நிறுவ முடியுமா? கடந்த மாகாண சபைத்தேர்தலில் ஐ.தே.கட்சி பட்டியலில் நான்கு முஸ்லிம்கள் மாகாண சபைக்கு மாகாண சபை உறுப்பினர்களாக அனுப்பப்பட்டார்கள் அவர்களினால் கடந்த ஐந்து ஆண்டுகளிலும் அவர்களினால் குருநாகல் மாவட்ட முஸ்லிம்கு என்ன நன்மை ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். மாகாண சபை உறுப்பினர் நான்கு பேரும் மாதாந்தம் குறித்த தினத்தில் அவர்களின் சம்பளத்தை பெற்றிருப்பார்கள். அவை தவிர குருநாகல் மாவட்ட முஸ்லிம்களுக்கு சொல்லக் கூடிய அபிவிருத்தி எதனையுமே செய்திருக்க மாட்டார்கள்.

மு.கா.தற்போது எந்தவொரு கொள்கையும், கோட்பாடும் கிடையாது. தலைவர் றவூப் ஹக்கீம் ஒரு பக்கம், தவிசாளர் பசீர் சேகுதாவூத் இன்னுமொரு பக்கமும், செயலாளர் ஹசன் அலி இவர்களுக்கு எதிரான பக்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாப்பக்கங்களிலும் நின்று கொண்டு  முஸ்லிம் சமூகத்தை குழப்பிக் கொண்டு செல்வதை எங்களால் அறிந்து கொள்ள முடியும். மாபெரும் தலைவர் அஸ்ரபின் மறைவுக்குப் பின்பு முஸ்லிம் சமூகத்தினுடைய எந்த உரிமையை றஊப் ஹக்கீம் பெற்றுத் தந்திருக்கிறாh?; என்று நமக்குள் நாம் கேட்க வேண்டும். பத்திரிகைகளில் ஊடகங்களில் அட்டகலமாக கொட்டெழுத்தில் அறிக்கைகளை விட்டதைத் தவிர வேறு என்ன செய்திருக்கிறார்கள். தோதல்;கள் வரும் போது முஸ்லிம் மக்களை ஏமாற்றி உரிமைகள் என்றும், விடுதலை என்றும் சமூகம் என்றும், சுயநிர்ணயம் என்றும் தமிழ் வசனங்கனைக் கூறி முஸ்லிம்களை உணர்ச்சி வசப் படுத்தி ஏமாற்றியதைத் தவிர வேறு என்ன உரிமைகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறாhகள்;.

முஸ்லிம்களின் தனித்துவம், முஸ்லிம்களின் சுயாட்சி, என்று மார்பு தட்டிப் பேசுகின்ற மு.கா. சர்வதேச மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை;கு வந்த போது அவர்களிடம் என்ன பேசினாhகள்; என்பதை இந்த நாட்டு மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பிpகரங்கமாகக் கூற முடியுமா என்று கேட்க விரும்புகின்றோம். நவநீதம் பிள்ளையினால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி முஸ்லிம் தலைவவர்களினால் எதுவும் கூறப்படவில்லை என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் பிரச்சினை என்ன என்பதை மு.கா. அடையாம் கண்டுள்ளார்களா? அவ்வாறு அடையாளப்படுத்தி  இருந்தால் அந்தப்பிரச்சினைகளை ஆவணப்படுத்தி இருக்கின்றார்களா? அவ்வாறு ஆவணப்படுத்தி இருந்தால் அந்த ஆவணத்தை முஸ்லிம்களின் பார்வைக்கு முன்வைப்பார்களா?

நவநீதம் பிள்ளை அவர்களை முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம்தான் சந்தித்து பேசியுள்ளார்கள். நவநீதம் பிள்ளை அவர்களின் ஊடக செய்தி அறிக்கையில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் சம்மந்மாக முஸ்லிம் தலைவர்களினால் பேசப்படவில்லை என்று கூறியுள்ளார். அப்படியானால் மு.கா. நவநீதம் பிள்ளை அவர்களைச் சந்தித்து என்ன செய்தார்கள் என்று கேட்க விரும்புகின்றேன். மு.கா. துரோகதத்தனத்தில், சித்து விளையாட்டில் இதுவும் ஒன்று. இந்த கோமாளிக் கூட்டத்திற்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டுமா?

மு.கா. தமிழ் பத்தரிகைகளில் முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்திற்கும் பிரச்சினை உள்ளது என்று ஒரு முகத்தைக் காட்டி பேசுகின்றது. சிங்களப் பத்திரிகைகளில் அரசாங்கத்தை விட்டு வெளியேற மாட்டோம் ஜனாபதியில் நம்பிக்கை இருக்கிறது என்று இன்னொரு முகத்தை காட்டுகிறது. ஆங்கிலப்பத்திரிகையில் சர்வதேச சமூகத்திற்குக் காட்டுவதற்காக பிரச்சினைகளைத்தீர்ப்பதற்கான செயற் திட்டங்களை வகுத்திருக்கின்றோம் என்று கூறுகின்றது. காலையில் ஒரு அறிக்கை, மாலையில் இன்னுமொரு அறிக்கை, இரவில் ஒரு போக்கு, பகலில் வேறொரு போக்கு செய்வதறியாமல் மு.கா. குழுப்பமடைந்து நானிக்குறுகி ஓய்வெடுக்க நேரமில்லாமல் பேயாட்டம் ஆடுகின்றது.

இத்தேர்தலில் மு.கா.ஒரு ஆசனத்தையும் பெறமுடியாது. குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் இச்சந்தர்பத்தை சிறப்பாக பயன் படுத்த வேண்டும். ஐ.தே.கட்சிக்கும், மு.காங்கிரஸூக்கும் தகுந்த பாடத்தை பலமாக கற்பிக்க வேண்டும். அரசாங்க கட்சியின் வேட்பாளர் அப்துல் சத்தார் அவர்களின் வெற்றி குருநாகல் மாவட்ட முஸ்லிம்களின் வெற்றி இந்த வெற்றியை தக்கவைத்துக் கொண்டு முஸ்களின் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க நீங்கள் ஒவ்வொருவரும் ஒற்றுமைப்பட்டு ஒன்று பட்டு செலாற்றுமாறு வேண்டுகின்றோம். விடைபெறுகின்றேன்.

2 comments:

  1. சொந்த ஊரில் ஒரு பிரதேச சபைத்தேர்தலில் வெல்ல முடியாதவர் குருநாகல் முஸ்லிம்களுக்கு புத்திசொல்லப் போயிருக்கிறார்.

    ReplyDelete
  2. வெங்காயம்

    ReplyDelete

Powered by Blogger.