Header Ads



ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பின் 'லவ் ஜிஹாத்'

(Thoo) முஸாஃபர் நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக ஜாட் இனத்தவர்களை தூண்டிவிட விசுவ ஹிந்து பரிஷத் என்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பு, ‘லவ் ஜிஹாத்’ ஐ ஆயுதமாக பயன்படுத்தியுள்ளது.

ஒரு பைக் விபத்தின் பெயரால் நடந்த வாய்த் தகராறும் கொலையும் இரு பிரிவினர் இடையே கலவரமாக மாற்றுவதற்கு வி.ஹெச்.பி., பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் ‘லவ் ஜிஹாத்’ என்பதை பிரயோகித்துள்ளனர்.

கடந்த மாதம் 27-ஆம் தேதி மோட்டார் பைக் விபத்தில் உருவான தகராறில் ஜாட் சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் ஒரு முஸ்லிம் இளைஞரை கொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து நடந்த மோதலில் ஊர் மக்கள் இரண்டு ஜாட் இனத்தை சார்ந்த இளைஞர்களை கொலை செய்தனர்.

முதல் நாள் கலவரம் பெரிய அளவில் உருவாகவில்லை. பின்னர் வி.ஹெச்.பி.யினர் ஜாட் இனத்தை சார்ந்தவர்களை சதித் திட்டம் தீட்டி தூண்டி விட்டு கலவரத்தை உருவாக்கினர்.

ஜாட்டுகளின் மஹா பஞ்சாயத்தை ஆகஸ்ட் 31, செப்டம்பர் 7 ஆகிய தினங்களில் கூட்ட வி.ஹெச்.பி. அழைப்பு விடுத்தது. இந்த பஞ்சாயத்துக் கூட்டங்களில் வகுப்புவாத துவேசத்தை உருவாக்கும் உரைகள் நிகழ்த்தப்பட்டன.

மஹா பஞ்சாயத்து கூட்டங்களில் ’லவ் ஜிஹாத்’ கதையை விவரித்தனர். தனது சகோதரியை ஆட்சேபித்த முஸ்லிம் இளைஞர்களை தட்டிக் கேட்டதைத் தொடர்ந்து ஜாட் இனத்தைச் சார்ந்த இளைஞனையும், அவனது நண்பரையும் முஸ்லிம்கள் கொலை செய்ததாக பொய்யான செய்தியை பரப்புரை செய்தனர்.

இதனை ஜாட் இனத்தவர்களிடம் தங்களால் புரிய வைக்க முடிந்தது என்று வி.ஹெச்.பி.யின் தலைவர் சந்திரமோகன் சர்மா என்பவர் ஒரு தேசிய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஹிந்துப் பெண்களை பயன்படுத்தி முஸ்லிம்களின் மக்கள்தொகையை அதிகரிப்பதற்கான தந்திரம் என்று மஹா பஞ்சாயத்தில் பங்கேற்ற வி.ஹெச்.பி. தலைவர் உரையாற்றியுள்ளார். பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் ஜாட் இனத்தவர்களையும், இதர ஹிந்து சமுதாயத்தவர்களையும் தாக்குவதாக பொய்யான செய்திகளை பரப்புரை செய்ததோடு போலியான சி.டி.க்களும் விநியோகிக்கப்பட்டன.

இம்மாதம் ஏழாம் தேதி நடந்த மஹா பஞ்சாயத்துக் கூட்டத்திற்கு பிறகுதான் கலவரம் தீவிரமானது.

No comments

Powered by Blogger.