Header Ads



திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்

காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண் அதை வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அமெரிக்காவின் டென்னிசே நகரை சேர்ந்தவர் கிறிஸ்டி பிளாக் (43). இவர் தனது காதலன் பாபிலேயிடம் இருந்து ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்தை திருடினார். அதை ஆசனவாய் வழியாக திணித்து குடல் பகுதியில் மறைத்து வைத்தார். பின்னர் அப்பணத்தை வெளியே எடுக்க பிரஷ் உள்ளிட்டவை மூலம் ஏதேதோ முயற்சி செய்தார்.

ஆனால், அதை வெளியே எடுக்க முடியவில்லை. அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக ஆசனவாய் வழியாக பெருமளவில் ரத்தம் வெளியேறியது. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் குடல் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் வெளியே எடுக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.