Header Ads



சிரியா ரசாயன ஆயுதங்கள் பற்றிய விவரங்களை ஒப்படைத்தது

சிரியாவில் உள்நாட்டு கலவரம் நடந்து வருகிறது. இந்நிலையில், டமாஸ்கஸ் புறநகரில் ரசாயன குண்டு தாக்குதலில் ஏராளமானோர் பலியாயினர். இதையடுத்து, சிரியா ரசாயன ஆயுதங்களை அழிக்காவிட்டால், அந்நாட்டின் மீது போர் தொடுக்க போவதாக அமெரிக்கா எச்சரித்தது. அதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் ரசாயன ஆயுதங்களை சிரியா ஒப்படைக்க வேண்டும் என்று ரஷ்யா கூறியது. அதன்படி ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில், சிரியாவிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை அழிக்க ரஷ்யா உதவுவது என்று முடிவானது. மேலும், ‘ரசாயன ஆயுதங்களை கைவிடும் விஷயத்தில் சிரியா உண்மைகளை மறைத்தால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்’ என அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து எச்சரித்தன. இதை சிரியாவும் ஏற்றது.

இந்நிலையில், ஐ.நா.வின் ரசாயன ஆயுதங்கள் தடுப்பு அமைப்பிடம் (ஓபிசிடபிள்யூ) சிரியா நேற்று ரசாயன ஆயுதங்கள் பற்றிய விவரங்களை ஒப்படைத்தது. ‘சிரியா மொத்தம் 1000 டன் ரசாயன ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும், அவற்றில் ஒரு பகுதியை மட்டுமே காட்டியுள்ளது என்றும் இன்னும் நிறைய விவரங்களை பெற்று அந்த ஆயுதங்களை அழிக்க வேண்டியுள்ளது என்றும் ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் சிரியாவிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை அழிக்க ஓராண்டுக்கு மேல் ஆகும் என்றும் அதற்கு கோடிக்கணக்கான பணம் செலவாகும் என்றும் கூறியுள்ளனர்.

No comments

Powered by Blogger.