ஆசிரியர் மீது தாக்குதல் - ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
(எம்.ரீ.எம்.பாரிஸ்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குற்பட்ட மட்-ஓட்டமாவடி தேசிய பாடசாலை ஆசிரியர் இப்றாஹீம் மீது மாணவனொருவனின் தந்தை தாக்குதல் நடாத்தியுள்ளார்.
இதன் காரணமாக குறிந்த ஆசிரியர் வாழைச்சேனை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வெள்ளிக்கிழமை 06.09.2013 இத்தாகுதலை கண்டித்தும்,ஆசிரியரைத் தாக்கிய மாணவனின் தந்தையை கைது செய்து,அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கேரியும் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்களும்,ஆசிரியர்களும் பாடசாலைப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதோடு மாத்திரமல்லாது குறிந்த பாடசாலை சந்தியில் இருந்து வாழைச்சேனை நீதி மன்றம் வரை மாணவர்கள் கவணயீப்பு பேரணி ஒன்றினை வீதியின் (வலம்,இடம்) இரு புறங்களிலும் மேற்கொண்டனர் இடையில் மாணவர்களை தடுத்து நிறுத்திய வாழைச்சேனை பொலீசார் மாணவர்களுக்கு அறிவுறுத்தல் கூறியமைக்கமைவாக மாணவர்கள் அமைதியாக கலைந்து பாடசாலையை நோக்கி சென்றனர்.
இப் பேரணி தொடர்பாக பாடசாலை உயர்தர மாணவர் ஒன்றியத்தின் மாணவ தலைவன் எம்.ஐ. அஸ்பாக் கருத்து தெரிவித்தார். தங்களுக்கு கல்வி கற்றுத்தரும் ஆசிரியர்கள் என்று பாராமல் குறிந்த ஆசிரியரை தாக்கியமை மனவேதனையாகும் அவருக்கு நேர்ந்த கெதி எந்த ஆசிரியருக்கும் ஏற்பட கூடாது என்பதற்காகவே உயர்வகுப்பு மாணவர் ஒன்றியம் இப் பேரணியை ஒழுங்கு செய்திருத்ததாக குறிப்பிட்டார்.
சம்பவம் குறிந்து தெரிய வருவது, இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட பிணக்கினை தீர்த்து வைக்குமுகமாக இரு மாணவர்களும் குறிந்த ஆசிரியரினால் கண்டிக்கப்பட்டுள்ளனர். இதனை கேள்வியுற்ற குறிந்த மாணவனொருவனின் தந்தை அன்றைய தினம் பி.ப. 4.00மணியளவில் ஆசிரியரை சாரமாரியாக தாக்கியுள்ளதாக தெரிய வருகின்றது.
தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் தொடர்ந்தும் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில்,மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருவதோடு ஆசிரியரை தாக்கிய மாணவனின் தந்தையை கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக இன்று ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் பொலிசாருக்கும்மிடையில் இடம் பெற்ற சுமுகமான கலந்துரையாடலின் போது வாழைச்சேனை சமூகப்பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி அமானுல்லாஹ் தெரிவித்தார். இதனையடுத்து ஆசிரியர்கள் தமது பணி பகிஸ்கரிப்பிலிருத்து விலகி கொண்டனர் வழமை போல எதிர் வரும் திங்கட்கிழமை சீராக பாடசாலை நடை பெறும் எனவும்,நம்பிக்கை தெரிவித்தனர்.
Post a Comment