Header Ads



பேஸ்புக் ஐஸ்கீரிம் வந்தாச்சு..! (படங்கள்)


பேஸ்புக் போன்ற சமூகதளங்கள் மீதான மக்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இதனை நன்கு அறிந்து வைத்துள்ள வர்த்தக நிறுவனங்கள் அவற்றைப் பயன்படுத்தி நல்ல இலாபம் ஈட்டுகின்றன.

இந்நிலையில் குரோஷியாவில் உள்ள மேர்ட்டர் தீவில் உள்ள ஐஸ்கீரிம் வர்த்தக நிலையத்தில் பேஸ்புக் என்ற பெயரில் புதிய ஐஸ்கிரீமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'வெலண்டீனோ ஐஸ்கிரீம் ஷொப்' எனப்படும் குறித்த கடை உரிமையாளர்களில் ஒருவர் அவரது 15 வயதான மகள் பேஸ்புக்கினை அடிக்கடி உபயோகிப்பதனைக் கண்டே இவ் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தியுள்ளார்.

வெனிலா ஐஸ்கிரீமில் நீல நிற சிரைப்பொன்றை ஊற்றியே இதனைத் தயாரித்துள்ளனர். இதன் 1 ஸ்கூப்பின் விலை 1.32 அமெரிக்க டொலர்களாகும். இவ் ஐஸ்கிரீமிற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளதாகவும் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் பெயரில் டீ-சேர்ட்கள், செருப்புகள், கடிகாரங்கள் என பலவற்றை நாம் கடைகளுக்குச்செல்லும் போது காணக்கூடியதாக உள்ளது. மேலும் அண்மையில் ஸ்பெய்ன் நாட்டில் டுவிட்டர் ஹோட்டலொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.