வடமாகாண சபைத் தேர்தலை ரத்து செய்யுமாறு ராவண பலய கோரிக்கை
வடமாகாண சபைத் தேர்தலை ரத்து செய்யுமாறு, தாம் தேர்தல்கள் ஆணையாளருக்கு விடுத்து கோரிக்கை அடிப்படையில், அவர் இந்த விடயத்தை சட்ட மா அதிபரின் கவனத்துக்கு கொண்டு செல்லவிருப்பதாக ராவணபலய அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு 11-09-2013 ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் வைத்து தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்த போது இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலுக்காக முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில், நாட்டை பிளவுப்படுத்தும் முயற்சிகள் ஆரம்பித்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த வடமாகாண சபைத் தேர்தலை ரத்து செய்யுமாறு ராவணபலய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் 12-09-2013 தினம் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்ததேசப்பிரிய, சட்ட மா அதிபரை சந்தித்து ஆலோசனை பெறவிருப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளார்.
ஆழும் கட்சிக்கு வடமாகாணத்தில் தோல்வி 'நிச்சயம்' என்பதால் இப்படியொரு நாடகமா?
ReplyDeleteநீங்களெல்லாம் நினைத்ததுபோல ஒரு புல்லும் புடுங்க முடியாது.
ReplyDelete