Header Ads



இலங்கைக்கு ஹெரோயினை அனுப்பிய பிரஜையை கைது செய்ய சர்வதேச பிடியாணை

(Adt) இலங்கைக்கு சுமார் 250 கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான ஹெரோயினை அனுப்பியதாகக் கூறப்படும் பாகிஸ்தான் பிரஜையை கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மாளிகாஹந்த நீதவான் ரஷந்த கொடவெல சர்வதேச பொலிஸார் ஊடாக இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளார்.

கடந்த 30ஆம் திகதி பாகிஸ்தானில் இருந்து வந்த கொள்கலனில் 17500 கிறீஸ் டின்களுக்கு அடைக்கப்பட்டிருந்த நிலையில் பிரவுன் சுகர் வர்க்க ஹெரோயின் 205 கிலோ கிராம் சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டது.  இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவர் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட மற்றொரு சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் மாலிகாஹந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஹெரோயிக் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை இலங்கையில் தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.  இதற்கு முன் அதிகபட்சமாக கடந்த 2005ம் ஆண்டும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளை கிழங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 55 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. அது சரி மற்றைய நாடுகளில் ஹெரோயின் பிடிபட்டால், தீயிட்டு எரிப்பதை டிவியில் பார்த்துள்ளேன், இலங்கையில் இந்த முறை மட்டுமல்ல பலமுறை ஹெரோயின் பிடிபட்டுள்ளது ஆனால் இது வரை அவ்வாறு தீயிட்டு எரித்த காட்சிகளை கானவில்லை.அவற்றுக்கு என்ன நடக்கிறது என்பது புரியாத புதிர் தான்

    ReplyDelete

Powered by Blogger.