ரசாயன ஆயுதங்களை அகற்ற, ஒப்பந்தத்தில் கையெழுத்திட சிரியா சம்மதம்
ரசாயன ஆயுதங்களை அகற்றுவது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட சிரியா சம்மதித்துள்ளது.
சிரியாவில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 21–ந்தேதி ராணுவம் நடத்திய ரசாயன குண்டு தாக்குதலில் 1429 பேர் பலியாகினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா சிரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதாக அறிவித்தது.
அதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ரஷியா ஈடுபட்டுள்ளது. சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பு கவுன்சிலிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டது.
அதற்கு சம்மதித்த அமெரிக்கா சிரியா மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் ரசாயன ஆயுதங்களை அகற்றுவது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட சிரியா சம்மதித்துள்ளது.
இதுகுறித்து சிரியா வெளியுறவு மந்திரி வாலித் முயல்லம் லெபனானின் அல்–மைதீன் டி.வி.க்கு பேட்டி அளித்தார். அதில் சிரியாவின் உள்ள ரசாயன ஆயுதங்களை அகற்ற தயாராக இருக்கிறோம். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதற்கு முன்னோடியாக ரசாயன ஆயுதங்கள் அகற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறோம். ஆயுத பாதுகாப்பு கிடங்குகளை திறந்து அவற்றை பறிமுதல் செய்து கொள்ளலாம். ஐ.நா. சபை, ரஷியா மற்றும் சர்வதேச நாடுகள் முன்னிலையில் இதை செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment