Header Ads



சவூதி அரேபியாவில் முத்தவ்வா அலுவலகத்திற்கு தீ வைக்க முயற்சி

சவூதி அரேபியாவில் நன்னெறிக் காவலர்கள் எனப்படும் முத்தவ்வா அலுவலகத்திற்கு அடையாளம் தெரியாத ஆட்கள் தீ வைக்க முயற்சி செய்துள்ளனர்.

தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் உள்நோக்கம் உடையது என்றும், இந்த தீ விபத்தில் காயமோ, சேதமோ ஏதுமில்லை என்றும்  சவூதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன

நன்னெறிகளை ஏவி, தீமைகளைத் தடுக்கும் குழுமம் என்ற பெயர்க் கொண்ட இக்காவலர்கள் முத்தவ்வாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். மத அடிப்படையில் நன்னெறிகளை முன்னெடுத்துச் செல்லும் இவர்கள், தங்கள் அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்வதாக  குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சவூதி அரசு இவர்களுக்கான அதிகார வரம்பைக் குறைத்திருந்தது.

நேற்று நடைபெற்ற சம்பவத்தில், முத்தவ்வா அலுவலகத்தின் வெளியே இருந்த மின்மானி (எலெக்ட்ரிக் மீட்டர்) வழியே தீப் பிடிக்க வைக்க அடையாளம் தெரியாத கும்பல் முயன்றுள்ளது.  ஆயினும் இம்முயற்சி வெற்றி பெறவில்லை என்றும், சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் முஹம்மது அல் ஷுரைமி தெரிவித்துள்ளார். inne

No comments

Powered by Blogger.