இஸ்ரேல் இராணுவத்தைவிட இலங்கை இராணுவம் திறமையானது - சுப்பிரமணியம் சுவாமி
இஸ்ரேல் இராணுவத்தின் வினைத்திறனை மிஞ்சும் அளவுக்கு இலங்கை இராணுவம் திறமையானதாக மாறியுள்ளதாக இந்திய ஜனதா கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டொக்டர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்தார்.
இலங்கை இராணுவம் மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் பாதுகாப்பு கருத்தரங்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்னாயக்கவின் தலைமையில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. “முரண்பாட்டுக்குப் பின்னரான இலங்கை; சவால்களும் பிராந்திய உறுதிப்பாடுகளும்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த கருத்தரங்கின் இறுதி நாளான நேற்று விஷேட உரை நிகழ்த்திய டொக்டர் சுப்பிர மணியம் சுவாமி மேலும் உரையாற்றுகையில்:-
2009ம் ஆண்டு மே மாத நடுப்பகுதியில் இலங்கை ஆயுதப்படையினர் மிலேச்சத்தனமான கொலைகார பயங்கரவாத இயக்கமான எல்.ரி.ரி.ஈக்கு எதிரான இறுதி யுத்தத்தில் அந்தப் பயங்கரவாத இயக்கத்தை துவம்சம் செய்யும் சாதனையை புரிந்தது. அவ்வியக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை மற்றும் அவரது பிரதான தளபதிகளும் 2009 மே மாதம் 19ம் திகதியன்று மரணமடைந்ததுடன் இலங்கையின் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற இரத்த ஆற்றுக்கு வழியமைத்த பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எனவே, மே மாதம் 19ம் திகதியன்று பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட வெற்றித்தினமாக அனைவரும் நினைவு கூர வேண்டும் என்று தெரிவித்தார். இந்த வெற்றியை அடைவதற்கு இலங்கை ஆயுதப்படையினர் மாபெரும் தியாகங்களை புரிந்ததாகவும் இத்தகைய மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளுக்கு எதிராக சிவில் சமூக அமைப்பு உலக ரீதியில் மேற்கொண்ட போராட்டமும் இந்த வெற்றிக்கு உறுதுணை புரிந்தது என்று கூறினார்

Post a Comment