ஊர்க்கோசமும், பிரதேசவாதமும் நவீன ஜஹிலியத் - ஹனீபா மதனி
ஒருங்கிணைக்கப்பட்ட அரசியல் அதிகாரம் கொண்ட தலைமைத்துவம் ஒன்று அமையாத பட்சத்தில் நமது முஸ்லிம் சமூகம் இன்று முகங்கொடுக்கும் சவால்களை வெற்றி கொள்வது முடியாது போய்விடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பணிப்பாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்தார்.
வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில் 2ம் இலக்கத்தில் போட்டியிடும் றிழ்வான் ஹாஜியை ஆதரித்து கொட்டறமுல்லை நாத்தாண்டியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு ஹனீபா மதனி தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,
நமது நாட்டில் அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகத்திற்கெதிராக நடைபெற்று வருகின்ற அநீதிகளும் அநியாயங்களும் இதனை எமக்கு கட்டியம் கூறி நிற்கின்றன. நமது சமூகத்தில் சமய சமூகப் பணிகளில் ஈடுபட்டுத் தொண்டாற்றுகின்ற பெருந்தகைகள் அவர்கள் தப்லீகு ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களோ, ஜமாஅத்தே இஸ்லாமைச் சேர்ந்தவர்களோ, தௌஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது தரீக்காக்களின் வழி நடப்பவர்களோ யாராக இருப்பினும் அவர்கள் அனைவருமே முஸ்லிம் சமூகத்தில் முக்கிய பங்கையும், பாத்திரங்களையும் வகிப்பவர்களாகும்.
வௌ;வேறு முகாம்களில் இருந்து சமய சமூகப் பணிகளில் ஈடுபடும் இவர்கள் அனைவரும் ஒன்றுபட்ட அரசியல் அதிகாரமின்றி நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெற்றி கொள்ள முடியாது எனும் முடிவுக்கு வந்திருக்கின்றார்கள். அண்மைக்காலமாக நாட்டில் நடந்தேறிய விவகாரங்கள் இதனை தெட்டத் தெளிவாக எடுத்தியம்புகின்றன.
முஸ்லிம்களின் உரிமைக் குரலாக முஸ்லீம் பெயருடன் இயங்கு நிலையில் இருக்கின்ற ஒரேயொரு கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமேயாகும். குர்ஆனும் ஹதீஸூம் இக்கட்சியின் யாப்பாக தலைவர் மர்ஹும் அஷ்றபு அவர்களால் தீர்க்கதரிசனத்துடன் எழுதப்பட்டிருக்கின்றது.
மாபெருந் தலைவர் மர்ஹூம் அஷ்றபு அவர்கள் தூரநோக்குடன் இக்கட்சியின் யாப்பை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள இக்கட்சியில் தற்போது எட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களும், பல மாகாண சபை உறுப்பினர்களும், நூற்றுக்கணக்கான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இந்நாட்டில் ஐந்துக்கு மேற்பட்ட உள்ளுராட்சி சபைகளும் இக்கட்சியின் ஆளுகையில் உள்ளன.
எனவே, முஸ்லிம் சமூகம் வேண்டி நிற்கின்ற அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கு இச்சமூகத்தின் முற்போக்குச் சிந்தனையுள்ளவர்களுக்கு எதிரே முஸ்லிம் காங்கிரஸ் எனும் இப்பேரியக்கத்தைத் தவிர வேறு தெரிவுகள் எதுவும் கிடையவே கிடையாது.
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் களத்தி;ல் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்றும், தேசிய முஸ்லிம் காங்கிரஸ் என்றும் பெயர்களைத் தாங்கி உள் நுழைந்தவர்கள், 2009ம் ஆண்டிலிருந்து தங்களது கட்சிகளின் பெயர்களிலிருந்த 'முஸ்லிம்' என்ற பதத்தை அவர்களது அரசியல் சுயஇலாபங்களுக்காகவும், பேரினவாத அரசியலாளர்களின் விருப்பங்களுக்கு அமையவும் அகற்றிக் கொண்டார்கள். இதன் மூலமாக பதிவு ரீதியாகவே அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் நலன்களைப் பேணும் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்கள்.
நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டபோதும், முஸ்லிம்களின் கலாசார உரிமைகள் மீறப்பட்ட வேளைகளிலும் இவ்வாறான 'முஸ்லிம்' அடையாளத்தை தமது கட்சிகளில் இருந்து நீக்கிக் கொண்ட அம்பாறை மாவட்ட அரசியல் தலைமை மௌனித்துக் கிடந்தது. மக்கள் இவற்றுக்கெதிராகக் குரல் கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்தபோது, முஸ்லிம்களும் தமிழர்களும் இனவாதம் பேசியதால்தான் சிங்களவர்களும் இனவாதம் பேசத் தொடங்கியிருப்பதாக விளக்கம் கூறியதோடு, வெளி மாவட்டங்களில் இடம்பெறும் பிரச்சினைகளில் தலையிட வேண்டிய அவசியம் தனக்கு இல்லையென்றும், அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும்போது அதனை தான் பார்த்துக் கொள்வதாக கபடத்தனமாகவும், மக்களை ஏமாற்றும் தோரணையிலும் கூறியிருப்பதை நீங்களும் அறிவீர்கள்.
எனவே, தேசிய ரீதியாக இயங்கும் தஃவா அமைப்புக்களும், தரீக்கா வழிச் சகோதரர்களும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஸ்ரீ.ல.மு. காங்கிரஸுடன் ஒன்றிணையும்போது இதுபோன்ற குறுகிய ஊர்க்கோசம், பிரதேசவாதம் என்பவற்றின் ஊடாக தமது சொந்த ஊர் மக்களை நிரந்தரமாக நவீன ஜஹிலியத்திற்குள் வைத்துக்கொள்ள நினைக்கின்ற இப்பேர்பட்ட அரசியல் பேர்வழிகள் முகவரியிழந்து போய் விடுவார்கள் என்பது திண்ணம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாப்பை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உருவாக்கித் தந்த நமது மாபெருந் தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் தூரநோக்குமிக்க இலட்சியக் கனவு நனவாகும் வகையில் இந்த நாட்டிலுள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களும், முஸ்லிம் தஃவா அமைப்புக்களும் முஸ்லிம் காங்கிரஸின் குடையின் கீழ் ஒன்றுபடும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
எனவே, முஸ்லிம் சமூகத்தின் விடுதலை வெற்றியை நோக்கிய பயணத்தில் நாம் எதிர்கொண்டுள்ள இத்தேர்தலில் மரச்சின்னத்திற்கு வாக்களிக்குமாறு உங்களை வினயமாக வேண்டிக் கொள்கின்றேன் என்றும் கூறினார்.
இங்கு கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ. ஹசன் அலி, கட்சியின் பொருளாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச். அஸ்லம் உட்பட புத்தள மாவட்டத்தில் மு.கா.வின் வேட்பாளர்கள் பலரும் கலந்து உரையாற்றினர்.
முஸ்லிம் சமூகத்திற்கான இயங்கு நிலையிலுள்ள ஒரே கட்சி ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ்தான என்பதில் இன்னும் தெளிவு வேண்டும்.
ReplyDeleteதேர்தல் காலங்களில் மாத்திரம் முஸ்லிம் பிரதேசங்களில் மேடையமைத்து முஸ்லிம்களின் தனித்துவம், உரிமைகள் பற்றி வாய் கிழியப் பேசுவது மாத்திரம்தான் தான் இயங்கு நிலையா?
இவ்வாறு முஸ்லிம்கள் மத்தியில் பேசி வாக்குகளைப் பெற்ற பின்னர் முஸ்லிம்களின் தனித்துவத்தையும், மத உரிமைகளையும், கலாசார விழுமியங்களையும் பல சேனா போன்ற குண்டர்களைக் கொண்டும், சம்பிக்க ரணவக்க போன்ற அரச சார்பு அமைச்சர்களைக் கொண்டும் மட்டந்தட்ட எத்தனிக்கின்ற அரசாங்கத்திற்கே விற்பனை செய்து தூங்குகின்ற முதலமைச்சர்களையும், வரப்பிரசாதங்களுக்கு வாக்களிக்கும் மாகாண சபை உறுப்பினர்களையும் பெறுவதுதான் இயங்கு நிலையா?
உரையில் தெரிவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உளளுராட்சி மு.கா. உறுப்பினர்களில் எமது காத்தான்குடி நகர சபையிலும் ஒரு உறுப்பினர் இருக்கின்றார்.
அவரும் இணைந்துதான் இஸ்லாத்திற்கு முற்றிலும் விரோதமான, இஸ்லாம் வெறுக்கின்ற, அழ்ழாஹ்வுடன் யுத்தம் செய்வதற்கு ஒப்பிட்டுக் கூறப்பட்ட 'வட்டிக்குப் பணம் எடுத்து வாகனம் வாங்கலாம்' என்ற நகர சபையின் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்து அவரது ஆதரவையும் அளித்துள்ளார்.
குர்ஆனையும், ஹதீஸையும் மு.கா.வின் யாப்பாக தலைவர் அஷ்ரப் உட்படுத்தி இருந்தாலும் இன்றைய ஸ்ரீ.ல.மு.கா. வின் மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு வட்டிக்குப் பணம் எடுக்கும் தீர்மானங்களுக்கெல்லாம் ஆதரவு வழங்குபவர்களாகவும், இஸ்லாத்தைக் குழி தோண்டிப் புதைப்பதில் முன்னணியில் நின்று செயற்படுபவர்களாகவும் இருக்கும்போது தப்லீக், தௌஹீத, தரீக்கா, ஜமாதே இஸ்லாமி போன்ற தஃவா அமைப்புக்களும் இந்த சாக்கடைக்குள் கால் பதிக்க வேண்டுமா? என்பதைப்பற்றி நன்கு பரிசீலனை செய்ய வேண்டும்.
எனவே, மு.கா. மறுபிறப்பெடுத்து இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும், தனித்துவத்தையும் பாதுகாத்து முஸ்லிம் மக்களை தலை நிமிர்ந்தவர்களாக வாழச் செய்ய வேண்டுமென்றால் இவ்வாறான சுயநலன்களுக்காக மார்க்கத்தை விற்றுப் பிழைக்கும் மக்கள் பிரதிநிதிகள் விடயத்தில் மு.கா. தலைமை உடனடிக் கவனம் செலுத்தியாக வேண்டும்.
குர்ஆனையும், ஹதீசையும் சட்டயாப்பாக வைத்துக் கொண்டு வட்டிக்குப் பணம் வாங்கும் தீர்மானங்களுக்கெல்லாம் ஆதரவளிக்கும் மு.கா. பிரதிநிதிகளால் எவ்வாறு இந்நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் முகவரியை நிலைநாட்ட முடியும்?
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
I wish you understand English or somebody will convey this message to you. "The modern Jahilia is the person like you learned Islam in Madina University utilised the resouces of the university and involving this dirty politics". You sould involve and strive in teaching of ISLAM, the worthy course.
ReplyDelete