பலாங்கொடை குகை ஆதி மனிதனின் எலும்புக்கூடு பரிசோதனை விரைவில்
பலாங்கொடை கூரகல குகையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் ஆய்வுகளுக்காக பிரித்தானியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அகழ்வாராய்ச்சிகளின்போது கிடைத்த உயிரினங்களின் எச்சங்களை பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நிபுணர்கள் பரிசோதித்ததாக தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பின்னர் மேலதிக ஆய்வுகளுக்காக அந்த எச்சங்களை அவர்கள் பிரித்தானியாவுக்கு எடுத்துச் சென்றதாக திணைக்களத்தின் சப்ரகமுவ மாகாண உதவிப் பணிப்பாளர் திஸ்ஸ மதுரப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
பலாங்கொடை கூரகல குகையிலிருந்து சுமார் நான்காயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாக அனுமானிக்கப்படுகின்ற உயிரினங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
இதனைத் தவிர மேலும் பல விலங்குகளின் எச்சங்களும் அகழ்வாராய்ச்சிகளின்போது கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த அகழ்வாராய்ச்சிகளின்போது கண்டுபிடிக்கப்பட்ட ஆதி மனிதனின் எலும்புக்கூடு தொடர்பான பரிசோதனையும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
Post a Comment